Latestமலேசியா

கழுத்தறுத்து குணவதி கொலை: மக்கள் கண்ணீர் அஞ்சலி!

சிரம்பான்,அக்.3- தாமான் சிரம்பான் ஜெயாவில் காசுக்காக குணவதி என்ற குடும்ப மாதுவை கொடூரன் ஒருவன் நேற்று கழுத்தறுத்து கொன்ற சம்பவம் நாட்டு மக்கள் பலரின் மனதை பெரிதும் பாதித்துள்ளது. மக்கள் பலரும் குணவதிக்கு இறுதி மரியாதை செலுத்தி வருகின்ற வேளை சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் குணாவும், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அருள் குமாரும் குணவதியின் இல்லத்திற்குச் சென்று அவரது நல்லுடலுக்கு இறுதி மரியாதைச் செலுத்தியுள்ளனர்.

மூன்று பிள்ளைகளுக்கு தாயான குணவதியை இழந்த துயரத்தில் அவரது குடும்பம் உள்ளது. அதிலும், தனது பெற்ற தாயை ரத்த வெள்ளத்தில் பார்த்த குணவதியின் 9 வயது மகன் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குணவதியின் கணவருக்கு குணாவும் அருள் குமாரும் ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

நேற்று தனது மூன்று மகன்களும் நேற்று பள்ளிக்குச் சென்றுவிட்ட நிலையில் குணவதி மட்டும் வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். அவரது கணவரும் செனாவாங்கிற்கு வேலைக்குச் சென்று இருக்கிறார். குணவதி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து ஆடவன் ஒருவர் வீட்டுக்கு வந்து குணவதியை கழுத்தறுத்து கொலை செய்திருக்கிறான். குணவதியிடம் இருந்த கைப்பேசி, பணம், நகைகள் ஆகியவற்றை அவன் கொள்ளையிட்டு தப்பியோடி இருக்கிறான்.

அச்சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த அந்த ஆடவன் இன்று நள்ளிரவில் போலீசார் கைது செய்தனர்.

அந்த 36 வயது இந்திய ஆடவன் ஜாலான் சிரம்பான்- தம்பினிலுள்ள தங்கும் விடுதி ஒன்றில் தங்கியிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அவன் பிடிபட்டதாக தெரிவிக்கப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker