Latestமலேசியா

போர்ட்டிக்சனில் பிரசாரத்திற்கு இடையே கடற்கரையில் அன்வார் உடற்பயிற்சி!

போர்ட்டிக்சன்,அக்.3- போர்ட்டிக்சன் இடைத்தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே எஞ்சியுள்ள நிலையில் தேர்தல் பரப்புரைகளில் பிகேஆர் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இருந்தபோதிலும், இந்த பரபரப்புக்கு இடையிலும் அவர் தெலுக் கெமாங் கடற்கரைக்குச் சென்று இயற்கையை ரசித்தவாறு உடற்பயிற்சி செய்திருக்கிறார்.

வெறும் காலில் தெலுக் கெமாங் கடற்கரையில் ‘ஜோகிங்’ சென்ற படத்தை அன்வார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

“என்னதான் தேர்தல் வேலைகள் அதிகமிருந்தாலும், உடல் ஆரோக்கியத்தை பொருட்படுத்தாமல் விட்டுவிடக் கூடாது” என அந்தப் படத்திற்கு அவர் பதிவும் இட்டிருக்கிறார்.

அக்டோபர் 13-ஆம் தேதியன்று போர்ட்டிக்சன் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதில், அன்வாரை எதிர்த்து அறூவர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker