Latestஉலகம்

அமெரிக்கா இல்லாமல் சவுதி மன்னர் பதவியில் நீடிக்க முடியாதா? -டிரம்ப்

வாஷிங்டன், அக்.4- அமெரிக்கா இல்லாமல் சவுதி அரேபிய மன்னரால் இரண்டு வாரங்கள் கூட பதவியில் நீடிக்க முடியாது என அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்க மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா தடை விதித்து வருகிறது. இதன் காரணமாக, ஈரானில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெய்யில் 40% முடங்கியுள்ளது.

இதனால் அனைத்துலக அளவில் கச்சா எண்ணெய்யின் தேவை அதிகரித்ததுடன் விலையும் உயர்ந்து வருகிறது. எனவே சவுதி அரேபியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கூடுதலாக கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த வேண்டுகோளை சவுதி அரேசியா ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டதால் டிரம்ப் கோபமடைந்தார். இந்நிலையில் இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் கூறியதாவது:

சவுதி அரேபியா பல ஆண்டு காலமாக அமெரிக்காவின் நட்பு நாடாக இருந்து வருகிறது. மேற்காசியாவில் மட்டுமின்றி உலக அளவில் பல்வேறு பிரச்சினைகளிலும் அமெரிக்காவுடன் கரம் கோர்த்து செயல்பட்டு வருகிறது.

ஆனால் கச்சா எண்ணெய் விவகாரத்தில் சவுதி அரேபியா கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. கவலையளிக்கிறது. அந்நாட்டின் பாதுகாப்புக்கு முழு பொறுப்பையும் அமெரிக்கா எடுத்துக் கொண்டுள்ளது.

அமெரிக்கா இல்லாமல் சவுதி அரேபியாவில் நாட்டை பாதுகாக்க முடியாது. நாங்கள் இல்லாமல் அந்த நாடு நீடித்து இருக்க முடியாது சவுதி மன்னர் சல்மான் எனக்கு நல்ல நண்பர் தான்.

ஆனால்,அமெரிக்கா இல்லாமல் இரண்டு வாரங்களுக்குக் கூட அவரால் சவுதி மன்னர் பதவியில் நீடிக்க முடியாது. இவ்வாறு அதிபர் டிரம்ப் பேசியுள்ளார். இந்த உரை தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker