Latestஉலகம்

கர்ப்பப் பை புற்றுநோயை ஒழிப்பு: ஆஸி.க்கு வெற்றி!

சிட்னி, அக்.4- கர்ப்பப் பை புற்றுநோயை ஒழிக்க ஆஸ்திரேலியா தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. கர்ப்பபை புற்றுநோயால் பெண்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

வளரும் நாடுகள் மற்றும் ஏழைகள் நாடுகளில் இந்நோய் பாதித்தவர்களில் 10 பெண்களில் 9 பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

இந்நோய் எச்பிவி என்ற வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது. அந்த வைரஸ் தாக்கிய பெண்களுக்கு தொடக்கத்தில் நோயின் பாதிப்பு தெரியாது. அதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படாது. உயிரை பறிக்கும் நிலை ஏற்படும் போது நான் இந்த வைரஸ் தாக்கியது தெரியவரும்.

இந்த வைரஸ் பாதிப்பால் ஆஸ்திரேலியாவில் ஆண்டுக்கு 1 லட்சம் பெண்கள் கர்ப்பப் பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்தனர். எனவே இந்நோயை ஒழிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதைத் தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு முதல் கர்ப்பப் பை புற்றுநோய் ஏற்படுத்தும் எச்.பி.வி வைரஸை கட்டுப்படுத்தும் தடுப்பூசி, பெண் குழந்தைகளுக்கு போடப்பட்டு வருகிறது. தற்போது அது சிறுவர்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்த தடுப்பு மருந்தால் ஆஸ்திரேலியாவில் தற்போது பெண்களுக்கு கர்ப்பப் பை புற்றுநோய் மிகவும் குறைந்து விட்டது. தற்போது 1 லட்சம் பெண்களில் 6 பேரை மட்டுமே கர்ப்பப் பை புற்று நோய் தாக்குகிறது. எனவே 2028 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலியாவில் இந்நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker