Latestசினிமா

‘நடிகையாக இருந்ததில் ஒருபயனும் இல்லை’ – லேகா வாஷிங்டன் குமுறல்

சென்னை, அக்.4- ‘காதலர் தினம்’, ‘உன்னாலே உன்னாலே’, ‘கல்யாண சமையல் சாதம்’, ‘அரிமா நம்பி’ ஆகிய படங்களில் நடித்தவர் லேகா வாஷிங்டன். அதன் பின் படங்களில் தொடர்ச்சியாக வாய்ப்பு வராத நிலையில் கடந்த 3 வருடத்துக்கு முன் நடிப்புக்கு முழுக்கு போட்ட இவர் தற்போது டிசைனர் மற்றும் ஓவியராக தொழில் செய்கிறார்.

இது பற்றி லேகா கூறும் போது நீண்ட நாட்களுக்கு முன்பே ”நான் நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டேன். அதன் பின் டிசைனர் நிறுவனத்தை தொடங்கினேன்” என்றார்.

நடிகையாக இருந்த போது கிடைத்த பெயரை விட டிசைனர் ஆன பிறகு நல்ல பெயர் பெற்றிருக்கிறேன். நடிகையாக இருந்தது டிசைனர் ஆவதற்கு உதவியாக இருந்ததா? என்று கேட்டால்…. நடிகையாக இருந்தது எவ்விதத்திலும் எனக்கு இந்த டிசைனர் தொழிலில் எனக்கு எந்தப் பயனும் இல்லை என்றே சொல்வேன் என அவர் சொன்னார்.

கூகுளில் சென்று என் பெயரை தேடினால் கவர்ச்சியான புகைப்படங்கள் தான் வரும். ஆனால் எந்த நேரத்திலும் லேகா வாஷிங்டனை ஒரு டிசைனராகவோ, ஓவியராகவோ பார்க்க முடியாது.

இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் நான் தமிழ்ப்படத்தில் நடித்த நடிகை என்று டிசைனர் துறையில் உள்ளவர்களிடம் சொன்னால் அதை அவர்கள் பெரியதாக எடுத்துக் கொள்வதில்லை.

அதுவொரு வித்தியாசமான துறை.அவர்களிடமிருந்து டிசைனர், ஓவியர் என்று எனக்கு பாராட்டு கிடைப்பதுதான் மிகவும் சந்தோஷம் என்கிறார் லேகா வாஷிங்டன்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker