Latestமலேசியா

நிதி மோசடியும் ஓரினப் புணர்ச்சி வழக்கும் ஒன்றா? –சுலைமான் கேள்வி

கோலாலம்பூர், அக்.4- முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் மீது சுமத்தப் பட்டுள்ள நிதி முறைகேடு வழக்குடன், சாதாரண ஓரினப் புணர்ச்சி வழக்கை ஒப்பிடுவது சரியல்ல என்று அரசு தரப்பு வழக்கறிஞர்களில் ஒருவரான டத்தோ சுலைமான் அப்துல்லா கூறினார்.

நஜிப் மீது சுமத்தப் பட்டுள்ள நம்பிக்கை மோசடி, ஊழல் மற்றும் பண மோசடிகள் குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் நிரூபிக்க ஆதாரங்கள் தேவைப் படுகின்றன என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

“எங்களிடம் பல்வேறான ஆவணங்கள் உள்ளன. இந்தப் பண மோசடி வழக்குடன் ஓரினப் புணர்ச்சி வழக்கை ஒப்பிட முடியாது. ஆதாரங்கள் இல்லாமல், நஜிப்பை யாரும் குற்றஞ்சாட்ட முடியாது. அதற்கு ஆதாரம் தேவை” என்றார் அவர்.

“நஜிப் மீதான குற்றச்சாட்டுகள், வங்கி பரிமாற்றங்கள் மற்றும் பல்வேறான ஆவணங்களின் அடிப்படையில் தான் சுமத்தப் பட்டுள்ளன” என்று சுலைமான் செய்தியாளர்களிடம் சொன்னார்.

நஜிப் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையிலான ஆவணங்கள் சிடியில் (குறுவட்டு) தொகுப்பாக வைக்கப் பட்டுள்ளதால், நஜிப்பின் வழக்கறிஞர் டான்ஶ்ரீ முகமட் ஷாஃபி அப்துல்லா, சுலைமானுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

சிடியில் தொகுக்கப் பட்டுள்ள அந்த ஆவணங்களை முறையாக படிக்க முடியவில்லை என்றும், அவற்றை அச்சுவடிவில் வழங்குவதற்கு தேவையான பணத்தை தாம் வழங்கத்தயார் என்றும் ஷாஃபி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“எங்களால் முடிந்தவற்றை நாங்கள் செய்து வருகிறோம். இந்த அரசாங்கத்திடம் பணம் இல்லை. இந்த நிலைமையை ஏற்படுத்தியது ஷாஃபியின் கட்சிக்காரர் தான். அரசாங்கம் அனாவசிய செலவுகளை ஏற்க முடியாது. அதனால் தான் ஆவணங்களை நாங்கள் சிடியில் தொகுத்துள்ளோம்” என்று சுலைமான் விளக்கினார்.

“இந்த வழக்கில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும், அனைவரையும் நம்ப வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். நான் வழக்கறிஞர் பணி செய்வதற்கான எனது லைசென்ஸை காட்ட வேண்டும் என்று ஷாஃபி கேட்கிறார் என்று சுலைமான் சுட்டிக்காட்டினார்.

ஆனால். ஷாஃபி உண்மையிலேயே வழக்கறிஞர் தானா? அதனை நிரூபிக்க அவர் தனது சட்டப் படிப்பிற்கான ஆவணங்களை காண்பிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை.டுத்து, நீதிபதியின் நியமனக் கடிதத்தை காண்பிக்குமாறு ஷாஃபி கேட்கக் கூடும்” என்று சுலைமான் பதிலளித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker