Latestஇந்தியா

பிரதமர் மோடிக்கு ஐ.நா.வின் உயரிய விருது

புதுடில்லி, அக்.4- பிரதமர் மோடிக்கு பூமியின் சாம்பியன் என்னும் உயரிய சுற்றுச்சூழல் விருதை டில்லியில் நடந்த விழாவில் ஐ.நா பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் வழங்கி கௌரவித்தார்.

அனைத்துலக அளவில் சுற்றுச்சூழலை சிறந்து முறையில் பாதுகாக்கும் மற்றும் மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடும் அரசு தனியார் நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகளுக்கு ஐநாவின் சார்பில் 2005ஆம் ஆண்டு முதல் பூமியின் சாம்பியன் (சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்) எனும் உயரிய விருது வழங்கப்பட்டு வருகிறது.

இதில் அரசுகளுக்கு வழங்கப்படும் 2018 ஆம் ஆண்டுக்கான விருதுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவல் மெக்ரான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதே போல் உலகிலேயே சூரிய சக்தியால் இயங்கும் முதல் விமான நிலையம் என்ற பெருமையை பெற்றுள்ள கொச்சி விமான நிலையத்துக்கு சிறந்த தொழில் முனைவோர் நோக்கு விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமக்கு வழங்கப்பட்ட விருது குறித்து பேசிய மோடி, இந்தியர்கள் எப்போதுமே இயற்கையை உயிருள்ள ஒன்றாகவே மதித்து வருகின்றனர்.

சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் இந்தியர்கள் ஒவ்வொரு தினமும் ஈடுபட்டு வருகின்றனர். 125 கோடி இந்தியர்களால் தான் எனக்கு இந்த விருது சாத்தியமாகியது. எனவே நாட்டு மக்களுக்கு இந்த விருதை அர்ப்பணிக்கிறேன் என பிரதமர் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker