Latestமலேசியா

20 ரூபாய் டாக்டர் ஜெகன்மோகன் மாரடைப்பால் மரணம்

சென்னை, அக்.4- சென்னையில் 20ரூபாய் டாக்டர் என்று மக்களால் அன்போடு போற்றப்பட்டு வந்த சேவையாளர் டாக்டர் ஜெகன்மோகன் மாரடைப்பால் காலமானார்.

மருத்துவர்கள். இத்தொழிலை தன் உயிராகவும் உறவாகவும் உன்னதமாகவும் கடைசி வரை கருதுபவர்கள் அரிதே. அதில் ஒருவர் தான் டாக்டர் ஜெகன்மோகன்.

மருத்துவருக்கு படித்து முடித்ததுமே சேவையை கையெலெடுத்த டாக்டர் ஜெகன்மோகன். இறுதி வரை கடைபிடித்து சேவை மனப்பான்மையை கடைபிடித்து ஆயிரக்கணக்கான மக்களை உயிர் பிழைக்கச் செயந்தார்.

1975-இல் புதிதாக ஆரம்பித்த தனது கிளினிக்கில் வரும் நோயாளிகளிடம் ஒரு ரூபாய் வாங்கி கொண்டு தான் சிகிச்சை அளித்தார். ஆனால் தன்னிடம் வேலை பார்க்கும் தாதியர், மின்சாரம் போன்ற கட்டணத்திற்காக நோயாளிகளிடம் வாங்கும் இந்த ஒரு ரூபாய் கட்டுபடியாகவில்லை.

அதனால் 20 ரூபாய் வாங்க ஆரம்பித்தார். அன்றிலிருந்து இன்றுவரை அவர் 20 ரூபாய் வாங்கினார். அதைவிடுத்து நோயாளிகளிடம் ஒரு பைசா கூட அதிகம் வாங்கியது இல்லை.

20 ரூபாய் டாக்டர் என்ற பெயர் சுற்றுவட்டார பகுதிகளில் பரவியது. குறைந்த கட்டணம் நிறைந்த சேவை என்ற பெயர் டாக்டர் ஜெகன்மோகனுக்கு ஒட்டிக் கொண்டது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கானோருக்கு சிகிச்சை அளித்து வந்தார்.

சில சமயங்களில் 20 ரூபாய் கூட இல்லாதர்களுக்கு இலவசமாகவே மருந்து கொடுத்து அனுப்பி விடுவாராம். 76 வயதான இவர் மாராடைபினால் உயிரிழந்தார். 20 ரூபாய் டாக்டரின் மறைவுக்கு மக்கள் திரளாக கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker