Latestஉலகம்

இலங்கையின் பணக்கார அரசியல்வாதிகள்: முதலிடம் ராஜ பக்சேவுக்கே!

கொழும்பு, அக்.5- இலங்கை அரசியல்வாதிகளில் பெரும் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர்களை வரிசைப் படுத்தி அமெரிக்காவின் புகழ்பெற்ற வர்த்தக இதழான போர்பஸ் சஞ்சிகை மேற்கோள்காட்டி இணையத்தளம் ஒன்று வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் இலங்கையின் பணக்கார அரசியல்வாதி யாராக இருப்பார் என்பதை ஓரளவுக்கு பலரும் யூகித்து விடுவார்கள். எல்லோரும் நினைப்பது போல் முதலிடத்தில் இருப்பவர் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தான். அந்த சஞ்சிகையின் படி அவரது சொத்து மதிப்பு 18 பில்லியன் டாலர்.

இரண்டாம் இடம் அமைச்சர் அர்ஜின ரணதுங்க 6 கோடி 80 லட்சம் டாலர், மூன்றாம் இடம் அதிபர் மைத்திரி பால சிறிசேனா 1 கோடி 40 லட்சம் டாலர், நான்காம் இடம் ஆறுமுகம் தொண்டமான். இவர் 19 லட்சம் டாலர் சொத்து வைத்திருக்கிறார்.

ஐந்தாம் இடம் யாருக்கு தெரியுமா, அந்த இடம் கருணாவுக்குத் தான். 17 லட்சம் டாலர் சொத்து வைத்திருக்கிறார். ஆறாம் இடம் ஏ. எச் பௌசி 14 லட்சம் டாலர், ஏழாம் இடம் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க 14 லட்சம் டாலர், எட்டாம் இடம் ஜேவிபி அனுரகுமார திஸாநாயக்கா 13 லட்சம் டாலர், ஒன்பதாம் இடம் அதாவுதுல்லா 9 லட்சம் டாலர்,பத்தாம் இடம் ரணில் விக்கிரம சிங்கே 8 லட்சத்து 60 ஆயிரம் டாலர் என அந்தச் சஞ்சிகை வரிசைப் படுத்தியுள்ளது.

தென்னிலங்கை அரசியல்வாதிகளோடு ஒப்பிடுகையில் வடக்கு-கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் இந்த பண விஷயத்தில் ஏமாளிகள் என்றே தெரிகிறது.ஏனெனில் அவர்களில் யாரும் (கருணாவைத் தவிர) இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker