Latestஇந்தியாஉலகம்

அமெரிக்க மிரட்டலையும் மீறி இந்தியா- ரஷ்யா 20 ஒப்பந்தங்கள்!

புதுடில்லி, அக்.6-இந்தியாவின் நீண்ட கால நெருங்கிய நாடுகளில் முக்கியத்துவம் பெற்று விளங்கும்  ரஷ்யாவின் அதிபர் புடின் இந்தியாவுக்கு வருகை புரிந்துள்ள வேளையில், அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையேயுள்ள உறவினை வலுப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் இந்தியா -ரஷ்யா உச்சநிலை மாநாடு நடைபெறுவது வழக்கம்.

இரு நாட்டு தலைவர்கள் இடையேயான தற்போதைய சந்திப்பின் போது இரு நாடுகளின்  உறவு, இருநாட்டு பாதுகாப்பு, ஒத்துழைப்பு, பிராந்திய மற்றும் அனைத்துலக பிரச்சனை குறித்து விவாதிக்கப் பட்டதாக அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து இருநாட்டு உயர் அதிகாரிகளின் சந்திப்புக்கு பின் முக்கியத்துவம் வாய்ந்த 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அவற்றில் ரஷ்யாவிடமிருந்து எஸ் 400 ரக ஏவுகணைகளை வாங்குவதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளது.

சுமார் 5 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி கையெழுத்தாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டின் கூடங்குளத்தில் இன்னும் இரண்டு அணு உலைகளை அமைப்பது தொடர்பாக இதில் முடிவெடுக்கப் பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

மேலும் அடுத்த 20 வருடத்தில் இந்தியாவில் 12 அணு உலைகளை ரஷ்யா அமைக்க உள்ளது. இது தொடர்பான ஒப்பந்தமும் விண்வெளிக்கு இந்தியர்களை அனுப்புவது, ரஷ்யாவில் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையத்தை அமைப்பது தொடர்பான ஒப்பந்தங்களும் கையெழுத்தாயின.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker