Latestமலேசியா

உணவகத்தில் சண்டை; அடிதடி பேர்வழிகளுக்கு போலீஸ் வலைவீச்சு! -(video)

பட்டர்வொர்த், அக்.8- இங்கு ஜாலான் ராஜா உடா என்ற பகுதியிலுள்ள உணவகத்தில் கடந்த சனிக்கிழமையன்று இரு கும்பலுக்கு மத்தியில் கைகலப்பு ஏற்பட்டது.

அச்சண்டையில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் அறுவரை போலீசார் கைது செய்துள்ள வேளையில், மேலும் இருவரை தேடும் பணி தொடர்வதாக வட செபராங் பிறை ஓசிபிடி துணை ஆணையர் நூர் ஸைனி முகமட் நோர் கூறினார்.

‘தொம் யாம்’ என்ற உணவிற்கு பிரசித்திப் பெற்ற அந்த உணவகத்திற்கு வந்த எட்டு பேர் அடங்கிய கும்பலில் ஒருவர், மூவர் அடங்கிய மற்றுமொரு கும்பலில் உள்ள ஆடவர் ஒருவரிடம் ஒரு மாதத்திற்கு முன்னர், கடன் வாங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

“அவ்விவகாரம் குறித்த பேச்சு வார்த்தையை நடத்துவதற்காக, அவ்விரு கும்பலும், அந்த உணவகத்தில் சந்தித்துக் கொண்டனர். அந்தப் பேச்சு வார்த்தையின் போது சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால், அங்கு கைகலப்பு ஏற்பட்டது.

“அந்த எட்டு பேர் அடங்கிய கும்பலைச் சேர்ந்த ஆடவன் ஒருவன், அங்கிருந்த நாற்காலிகள் மற்றும் கத்திகளை கொண்டு அந்த மூவரை தாக்கியதாக எங்களிடம் தெரிவிக்கப் பட்டுள்ளது. அந்த மூவரும் 20 வயதிலிருந்து 28 வயதிற்கு உட்பட்டவர்கள்.

“அச்சம்பவத்தில், அந்த மூன்று ஆடவர்களில் ஒருவருக்கு வலது கால், மற்றும் இடது மணிக்கட்டு முறிந்தது. அவரின் உடலில் பல்வேறு இடங்களில் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

அவரும் அவரின் இரு நண்பர்களும் செபராங் பிறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று நூர் ஸைனி சொன்னார். அச்சம்பவம் குற்றவியல் சட்டத்தின் 326 மற்றும் 148-ஆவது பிரிவுகளின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டுள்ளது.

7/10/2018Butterworth, Penang疑追债引发冲突,两批青年在餐馆大打出手,不只互抛椅子,还有人疑持巴冷刀砍人,吓坏用餐的顾客,场面一片混乱.双方共有约11人,其中借钱给嫌犯的事主及其两名友人在事件中受伤,事主已在医院被扣查.警方刻在追查一众嫌犯下落.事主的右脚膝盖及左手肘有被砍伤痕迹,其右脚及左手臂也骨折.这宗砍人案于昨晚10时10分.在北海拉惹乌达阿波罗良记东炎餐馆发生.'3 lawan 8'…Tiga lelaki termasuk seorang daripadanya patah kaki kanan dan pergelangan tangan kiri akibat pergaduhan dengan lapan lelaki di Jalan Raja Uda, malam tadi.Pergaduhan dipercayai berpunca dari pinjaman wang antara mangsa dengan suspek.Kumpulan lapan lelaki terbabit menggunakan kerusi dan parang dalam pergaduhan berkenaan menyebabkan dua rakan mangsa turut cedera.Mangsa kini menerima rawatan di Hospital Seberang Jaya.Ketua Polis SPU Asisten Komisioner Noorzainy Mohd Noor berkata, kes disiasat mengikut Seksyen 326/148 Kanun Keseksaan dan usaha memburu suspek sedang dilakukan.

Posted by 我们是马来西亚人 We are Malaysians on Sunday, 7 October 2018

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker