Latestமலேசியா

‘எப்படி இருக்கிறது மோடி அரசு?’ -மாபெரும் ஆன்-லைன் ஆய்வு

சென்னை, அக்.8- பிரதமர் நரேந்திர மோடி அரசு அமைந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. 2019-இல் நாடாளுமன்றத் தேர்தலை நாடு எதிர்கொள்ளவுள்ளது.

இத்தனை ஆண்டு காலத்தில் மோடி அரசு மீதான மக்களின் பார்வை என்ன என்பதை அறிந்து கொள்ள “டெய்லி ஹண்ட்” சார்பில் மிகப் பெரிய இணையவழி ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

நாட்டின் நம்பிக்கை (Trust of the nation) என்ற கருத்தில் ஆய்வு நடத்தப்படுகிறது. நாட்டில் இதுவரை நடைபெற்றதிலேயே மிகப் பெரிய அரசியல் கருத்து கணிப்பு இதுவாகும்.

2014 உடன் ஒப்பிடும் போது நரேந்திர மோடியின் தலைமை மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கை எப்படி மாறியுள்ளது? என்ற கேள்விக்கு கேட்கப்பட்டு அதற்கு 3 பதில்கள் வழங்கப் பட்டுள்ளன.

1, “நான் அவரை அதிகம் நம்புகிறேன்” என்பது முதல் பதில்.
2 ஆவது “நான் அவரை குறைவாக நம்புகிறேன்.”
3 ஆவது “அதே அளவு நம்புகிறேன்”

இதில் ஒருபதிலை வாசகர்கள் தேர்ந்தெடுக்கவேண்டும். தேசத்தில் மனநிலைனை பிரதிபலிக்கும் வகையில் இந்த ஆய்வு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker