Latestமலேசியா

நிந்தனைச் சட்டம் எப்போது அகற்றப்படும்? – மகாதீர்

கோலாலம்பூர், அக்.8- தேச நிந்தனைச் சட்டம் எப்போது அகற்றப்படும் என்பதற்கான சரியான காலவரையறையை அரசாங்கம் நிர்ணயிக்க முடியாது என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.

இந்தச் சட்டத்தை அகற்றுவதற்காக பணிகள் என்பது அதிக கால அவகாசம் தேவைப் படக்கூடிய ஒன்றாகும். அதேவேளையில் இந்த இடைப்பட்ட காலக் கட்டத்தில் தேச நிந்தனைச் சட்டத்தைப் போலீசார் நடைமுறையில் கையாளவே செய்வர் என்றார் அவர்.

இன்னமும் அந்த தேச நிந்தனைச் சட்டம் நடப்பில் இருந்து வருகிறது. இந்தச் சட்டத்தை இல்லாமல் ஒழிப்பதற்கு சிறிது காலம் பிடிக்கும். இதற்காக நாம் நாடாளுமன்றம் செல்ல வேண்டியிருக்கும். எனவே இந்த இடைக் காலத்தில் போலீசார் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி வருவர் என்று துன் மகாதீர் சொன்னார்.

”எனவே, இது பற்றி நான் கவலைப்படப் போவதில்லை. இந்த முடிவுக்காக என்னைக் குறை கூறுவோர் தாராளமாகச் செய்யலாம் என்று அவர் தெரிவித்தார்,

கூட்டரசு அரசியல் அமைப்புச் சட்டத்தோடு தொடர்புடைய சட்டங்களை அகற்ற வேண்டுமானால், அதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வேண்டும். நம்மிடம் பல சட்டங்கள் அகற்றப்பட வேண்டியதாக உள்ளது.  சில சட்டங்கள் திருத்தப் படவேண்டியுள்ளது என்று துன் மகாதீர் சுட்டிக் காட்டினார்.

எனவே, இதற்கு கால அவகாசம் பிடிக்கும். புதிய சட்டங்களை அட்டர்னி அலுவலகம் உருவாக்க வேண்டியுள்ளது. மேலும் கூட்டரசு அரசியல் அமைப்புச் சட்டத்துடன் சில சட்டங்கள் தொடர்பு உள்ளவை என்றார் அவர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker