Latestமலேசியா

போலீஸ் அதிகாரியிடம் நடு விரலைக் காட்டிய ஆடவனுக்கு ரிம100 அபராதம்!

கோலாலம்பூர்,அக்.8- போலீஸ் அதிகாரி ஒருவரைப் பார்த்து ஆபாச சைகையைக் காண்பித்த ஆடவன் ஒருவனுக்கு அதிகபட்சம் 100 ரிங்கிட் அபராதம் அல்லது 10 நாள் சிறைத்தண்டனையை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விதித்தது.

டேர்ரிக் ஜோன்சன் என்ற அந்த 28 வயது ஆடவன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து அவனுக்கு அத்தண்டனையை மாஜிஸ்திரேட் ராணி கார்த்தினி அப்துல் ரஹிம் விதித்து தீர்ப்பளித்தார்.

செப்டம்பர் 16-ஆம் தேதி, பிரிக்பீல்ட்ஸ், ஜாலான் புர்ஹானுடினில் போலீசார் சாலைத் தடுப்புச் சோதனையை மேற்கொண்டிருந்த சமயத்தில், சார்ஜன் மேஜர் நோர்ஹாய்சின் உடினைப் பார்த்து டேர்ரிக் தனது நடு விரலைக் காட்டி இருக்கிறான்.

அரசு தரப்பு துணை வழக்கறிஞர் அகமட் ஸிக்ரி ஜபார் டேர்ரிக்கிற்கு படிப்பினையாக அமைய வேண்டும் என்று அவனுக்கு தக்க தண்டனையை விதிக்குமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார். எனினும், டேர்ரிக் தனது தவறை உணர்ந்திவிட்டதாகக் கூறி அவனுக்கு குறைந்தபட்ச தண்டனையை விதிக்குமாறு அவனது வழக்கறிஞர் ஸ்டேன்லி கேப்ரியல் கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker