Latestஇந்தியாமலேசியா

இந்தியா கோரினால் இந்தியத் தொழிலாளர்களுக்கு மன்னிப்பு? -குலா விளக்கம்

புதுடில்லி,அக்.9- சட்டவிரோத தொழிலாளர்களாக விளங்கும் தங்கள் நாட்டுத் தொழிலாளர்களுக்கு மன்னிப்பு வழங்கும்படி இந்தியா கோரிக்கை விடுத்திருக்கும் பட்சத்தில் அக்கோரிக்கைக்கு எத்தகைய ஆட்சேபமும் இருக்காது என மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் கூறினார்.

எனவே, இந்தத் தொழிலாளர்கள் தொடர்ந்து இங்கு பணிப்புரிவதற்கான வழக்கச் சூழலுக்குள் கொண்டு வரப்படுவார்கள் அல்லது அவர்கள் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று அவர் சொன்னார்.

புதுடில்லியில் வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவராஜுக்கும் அமைச்சர் குலசேகரனுக்கும் இடையே நடந்த சந்திப்பின்போது இப்பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவிலுள்ள அந்நியத் தொழிலாளர்களின் பிரச்சனைகளை ஒரு சுயேட்சைக் குழு ஆராய்ந்து வருகிறது. இந்தக் குழு தனது அறிக்கையை சமர்ப்பித்த பின்னர், இந்தியாவில் இருந்து வந்துள்ள ஆவணமற்ற தொழிலாளர்களுக்கான சிறந்த தீர்வு குறித்து தங்களால் இயன்றதைச் செய்வோம் என்று செய்தியாளர்களிடம் பேசியபோது குலசேகரன் குறிப்பிட்டார்.

பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பில் தங்களுக்கு எத்தகைய ஆட்சேபமும் இல்லை என்றார் அவர்.

மலேசியாவில் ஒன்றரை லட்சம் இந்தியத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். எனினும், ஆவணமற்ற தொழிலாளர்களின் எண்ணிக்கை எதனையும் குலசேகரன் குறிப்பிடவில்லை.

அடுத்தாண்டு ஜனவரிக்குள் வேலைக்கும் வரும் தொழிலாளர்கள் தொடர்பில் மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அமைச்சர் குலசேகரன் சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker