Latestமலேசியா

தலை வேறு, முண்டம் வேறாக வயோதிகரின் சடலம் மீட்பு; மகன் கைது!

ஈப்போ,அக்.9- சிம்மோர், கம்போங் கந்தான் பாருவில் உள்ள வீடொன்றில் தலை துண்டிக்கப்பட்டு ஒருவர் வயோதிகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

74 வயது யூ சூ கிம் என்ற அந்த வயோதிகரின் தலை அவரது வீட்டுக்குப் பின் புறத்தில் புதைக்கப்படிருந்த வேளை முண்டம் கழிவுத் தொட்டியில் வீசப்பட்டிருந்தது இன்று கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அவரது 52 வயது மகனை போலீசார் கைது செய்துள்ளதாக பேரா குற்றப்புலனாய்வுத் துறைத் தலைவர் யாஹ்யா அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

நேற்றிரவு தந்தைக்கும் மகனுக்கு இடையே சண்டை மூண்டதாகவும் அப்போது மகன் நீண்ட பாராங் கத்தியை வைத்திருந்ததாகவும் அண்டை வீட்டார் போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளனர். அந்த கத்தி இன்று சம்பவம் நிகழ்ந்த வீட்டில் இருந்து ரத்தக் கறையுடன் கண்டெடுக்கப்பட்டது.

“மகன் எப்போது ஐஸ் என்ற போதைப்பொருளை வீட்டிலேயே உட்கொள்வதால் பெரியவர் மகனை எப்போதும் ஏசிக் கொண்டே இருப்பார். போதையில் அவரை அவன் இப்படிக் கொடூரமாகக் கொன்றிருக்கக் கூடும்” எனவும் அண்டை வீட்டார் கூறியுள்ளனர்.

யூ சூ கிம்மை பார்ப்பதற்காக அவரது மகள் யோங் தனது சகோதரனின் வீட்டுக்கு இன்று காலையில் சென்றிருக்கிறார். அப்போது வீட்டுக் கதவு பூட்டப்படாமலே இருந்திருக்கிறது. அதோடு யூ சூ கிம் படுக்கையிலும் சுவரிலும் ரத்தக் கறைகள் இருப்பதையும் யோங் பார்த்து சந்தேகத்தின் பேரில் அண்டை வீட்டுக்காரர்களை உதவிக்கு அழைத்திருக்கிறார்.

அப்போதுதான் வீட்டின் பின்புறத்தில் குழித் தோண்டப்பட்டதற்கான தடயங்கள் இருந்ததை அவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

தலை வேறு முண்டம் வேறாக இருந்த யூ சூப் கிம்மின் உடல் சவப்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பபட்டது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker