Latestமலேசியா

திருமண கேட்டரிங்: பணத்துடன் ஓடிவிட்ட ஆசாமிக்கு போலீஸ் வலைவீச்சு!

ஜொகூர் பாரு,அக்.9- ஜொகூர் பாருவில் திருமண வைபவத்துக்காக மாளிகை இம்பியான் கேட்டரிங் நிறுவனத்தின் சேவைகளை நாடியவர்களின் 2 லட்சத்து 63 ஆயிரத்து 94 ரிங்கிட் பணத்தை ஏமாற்றி தலைமறைவாகிவிட்ட அந்நிறுவனத்தின் உரிமையாளர் அபு காமிட் முகமட் அல் கஸாலி பாலுட் என்ற ஆடவனை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

அபு காமிட்டிடம் பணத்தைச் செலுத்தி ஏமார்ந்ததாக அவன் மீது 45 போலீஸ் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதை அடுத்தே போலீசார் அவனை தீவிரமாக தேடி வருவதாக ஜொகூர் போலீஸ் தலைவர் டத்தோ முகமர் காலில் முகமட் தெரிவித்தார். இந்த புகார்கள் கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து நேற்று வரை அளிக்கப்பட்டவை என அவர் குறிப்பிட்டார்.

இந்த விவகாரம் தொடர்பில், ஜொகூர் பாரு செலாத்தான், ஶ்ரீ ஆலாம், கூலாய், கோத்தா திங்கி ஆகிய மாவட்டங்களை உட்படுத்தி குற்றவியல் சட்டத்தின் செக்‌ஷன் 420-இன் கீழ் நான்கு விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. இது குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் துணை அமலாக்க அதிகாரி அஸ்லானை 07-2254656 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மாளிகை இம்பியான் கேட்டரிங் நிறுவனம், எண் 01-15, ஆகாசியா சூரியா, ஜாலான் ரெசிடெண்சி, பண்டார் புன்சாக் ஆலாம், சிலாங்கூர் என்ற முகவரியைத் தளமாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker