Latestமலேசியா

தேச நிந்தனை சட்டத்தை அகற்றுக! மகாதீருக்கு கோபிந்த் சிங் கோரிக்கை

கோலாலம்பூர், அக்.9- அடுத்த முறை நாடாளுமன்றம் கூடும் போது, தேச நிந்தனை சட்டம் அகற்றப் பட வேண்டும் என்று தொலை தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் கோபிந்த சிங் டியோ வலியுறுத்தினார்.

நாளை கூடவிருக்கும் அமைச்சரவையில், அந்தச் சட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் பட வேண்டும் என்று தாம் கேட்டுக் கொள்ளவிருப்பதாக அவர் தெரிவித்துக் கொண்டார்.

“தேச நிந்தனை சட்டத்தை அகற்ற வேண்டும் என்று பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி எண்ணம் கொண்டுள்ளது. சட்டத்துறை தலைவரும் அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளார். இன்று மதியம் அது குறித்து நான் அறிந்துக் கொண்டேன்” என்றார் அவர்.

தேச நிந்தனை சட்டத்தை அகற்றுவது மற்றும் அச்சட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது குறித்து பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், சட்டை செய்யாமல் இருக்கிறார். அதனால் வழக்கறிஞர்கள் பலர் அதிருப்தி அடைந்து உள்ளனர் என்ற இணையச் செய்தியை கோபிந்த சிங் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

நாடாளுமன்றம் மீண்டும் அக்டோபர் 15-ஆம் தேதி கூடவிருக்கிறது. தேச நிந்தனை சட்டம் என்று அகற்றப் படும் என்பது குறித்து இதுவரை எவ்வித தேதியும் ஒதுக்கப் படவோ வரையப் படவோ இல்லை என்று மகாதீர் நேற்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தச் சட்டத்தை அகற்றுவதற்கு கால அவகாசம் தேவைப் படுகிறது என்றும், நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப் பட்டு, அதன் பின்னரே, அச்சட்டம் அகற்றப் படும் என்றும் மகாதீர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker