Latestவிளையாட்டு

பேட்மிண்டன் உலகக் காதலர்கள்: காஷ்யாப் – சாய்னா திருமணம்!

ஐதராபாத், அக்.9- பேட்மிண்டன் விளையாட்டு உலகில் இந்தியாவின் முன்னணி வீரர் – வீராங்கனைகளாக விளங்கிய காஷ்யாப் -சாய்னா நேவால் ஜோடியின் திருமணம் டிசம்பர் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது. காதலர் காஷ்யாப்பை கரம்பற்றப் போகும் தகவலை முதன் முறையாக சாய்னா நேவால் உறுதிப்படுத்தினார்.

ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவரான இந்தியாவின் சாய்னா நேவால். சக வீரரும் தன்னுடன் ஒரே அகடாமியில் பயிற்சி பெற்று வருபவருமான காஷ்யாப்பை வருகிற டிசம்பர் 16ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார்.

ஆனால் இந்த திருமணம் குறித்து காதலர்கள் இருவரும் தொடர்ந்து மவுனம் சாதித்து வந்தனர். இந்நிலையில் டிசம்பர் 16ஆம் தேதி மணம் முடிக்க இருப்பதை சாய்னா நேவால் முதல் முறையாக உறுதி செய்துள்ளார்.

இது குறித்து சாய்னா நேவால் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:

2007ஆம் ஆண்டு முதல் காஷ்யாப்பை காதலித்து வருகிறேன். விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்பதால் தான் இருவரும் திருமணத்தை தாமதப்படுத்தினோம். இப்போட்டி நிறைந்த உலகில் நாம் வசித்து வருகிறோம். ஒருவருடன் நெருக்கமாகுவது என்பது கடினமானதாகும்.

ஆனால், நாங்கள் ஏதோ ஒரு விதத்தில் எளிதாக ஒருவருக்கொருவர் நெருங்கி பேசினோம். காதலை என்னுடைய குடும்பத்தினரிடம் சொல்லவில்லை. பெரும்பாலான நேரங்களில் போட்டிக்கு செல்லும்போது பெற்றோர்கள் என்னுடன் பயணம் செய்வது வாடிக்கையாகும். நான் யாருடன் நெருக்கமாக பழகுகிறேன் என்பதை வைத்து அவர்கள் எங்கள் காதலை புரிந்து கொண்டனர் என்று தெரிவித்துதார் சாய்னா நேவால்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker