Latestமலேசியா

மலேசியாவின் உயிர்கொல்லி: புற்றுநோய்க்கு 4-ஆவது இடம்!

கோலாலம்பூர், அக்.9- மலேசியாவை ஆட்டிப் படைக்கும் உயிர்கொல்லி நோய்கள் பட்டியலில், புற்றுநோய் நான்காவது இடத்தில் உள்ளது என்பது சுகாதார அமைச்சின் புற்றுநோயால் தாக்கப் பட்டு உயிர் பிழைப்பவர்கள் மீதான ஆய்வின் (மைஸ்கேன்) வாயிலாக தெரிய வந்துள்ளது.

அரசாங்க மருத்துவமனைகளில், புற்றுநோயால் தாக்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைவோர் எண்ணிக்கை 12.6%-ஆக உள்ளது. ஆனால், தனியார் மருத்துவமனைகளில், புற்றுநோயால் மரணமடைவோர் எண்ணிக்கை 26.7 விழுக்காடாக உள்ளது என்று அந்த ஆய்வில் குறிப்பிடப் பட்டுள்ளது.

இதனிடையில், ஒவ்வொரு ஆண்டும், புற்றுநோயால் முதன் முறையாக தாக்கப் படுவர்களின் எண்ணிக்கை 37,000-ஆக உள்ளது. இந்த எண்ணிக்கை, 2030-ஆம் ஆண்டில், 55,000-ஆக (ஓர் ஆண்டிற்கு) உயரும் என்று கணிக்கப் பட்டுள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டில் சுவாச நோய்கள், தொற்று மற்றும் ஒட்டுண்ணி நோய்களால் தான் மலேசியர்கள் பலர் மரணமடைந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சு தகவல் தெரிவித்திருந்தது.

மலேசிய தேசிய புற்றுநோய் மையத்தின் கீழ், சுகாதார அமைச்சின் தேசிய புற்றுநோய் நிறுவனம் நடத்திய ஆய்வின் வாயிலாக, மலேசியாவில் 15 வகை புற்றுநோய்களால் மலேசியர்கள் பாதிப்பிற்கு ஆளாகி உள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

நுரையீரல், நுரையீரல் மற்றும் மூச்சுக்குழாய், மார்ப்பகப் புற்றுநோய், பெருங்குடல், ‘நசோபார்னெக்ஸ்’, ஆண் உறுப்பு புற்றுநோய், மூளை மற்றும் நரம்பு மண்டலம், வயிறு, கல்லீரல், ‘செர்விகல்’, கர்ப்பப்பை, ‘கார்பஸ்’ வாய், தைராய்டு, கணையம், லுகீமியா மற்றும் லிம்போமா போன்ற புற்றுநோய்களால் மலேசியர்கள் பாதிக்கப் படுகின்றனர்.

கடந்த 2007-ஆம் ஆண்டிலிருந்து 2011-ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்ட ஆய்வின் வாயிலாக கணிக்கப்பட்ட எண்ணிக்கையில் மூன்று பங்கினர், இந்த 15 வகை புற்றுநோய்களால் தாக்கப் பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கை முறை மற்றும் பழக்க வழக்கங்களால் ஏற்படும் இதய நோய்கள் மற்றும் புற்றுநோய்கள் படிப்படியாக அதிகரித்து வருகின்றன என்று சுகாதார அமைச்சர் ஜூல்கிப்ளி அகமட் தெரிவித்துள்ளார்.

“மலேசியர்கள் பலர் புற்றுநோயால் பாதிக்கப் படுகின்றனர் என்பதை சுகாதார அமைச்சு கண்டறிந்துள்ளது. இது மேலும் தொடரக் கூடாது என்ற அடிப்படையில், அமைச்சு பல்வேறான முயற்சிகளை மேற்கொள்ளவிருக்கிறது.

“புற்றுநோயால் பாதிக்கப் படுபவர்கள் உயிர் பிழைக்க வேண்டும் என்பதற்கு ஏதுவான முயற்சிகள் மேற்கொள்ளப் படும்” என்று அவர் சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker