Latestஇந்தியாஉலகம்சினிமா

‘ரெமோ’ பட கெட்-அப்பில் சிவகார்த்திகேயனும் அவரது மகள் ஆராதனாவும்!

சென்னை,அக்.9- ரெமோ படம் வெளியாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில், அதனை கொண்டாடும் வகையில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது மகள் ஆராதனாவுடன் ரெமோ நர்ஸ் வேடத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தமிழ்த் திரையுலகில் நல்ல குடும்பப் பாங்கான படங்களாக நடித்து வரும் சிவகார்த்திகேயன் வித்தியாசமாக பெண் வேடத்தில் நடித்திருந்த படம்தான் ரெமோ. அதில் பெண் வேடம் பூண்டிருந்த சிவகார்த்திகேயன் ஒரு பெண்ணைப் போலவே தோற்றமளித்தார்.

இந்த படத்தின் எல்லா விதமான போஸ்டர்களும் அந்தப் படம் திரைக்கு வந்தபோதே வெளியாகியிருந்த நிலையில், இப்போது புதிதாக சிவகார்த்திகேயன் தனது மகள் ஆராதனாவுடன் இருப்பது போன்ற ஒரு போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

அந்த போஸ்டரின் சிறப்பு என்னவென்றால் அவரது மகளுக்கும் நர்ஸ் போல மேக்கப் போடப்பட்டுள்ளது தான்!

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker