Latestமலேசியா

UiTM பல்கலைக்கழகம் எல்லா இனத்தவர்களுக்கும் திறந்துவிடப் படுகிறதா?

கோலாலம்பூர்,அக்.9- மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (UiTM) அனைத்து இனத்தவர்களுக்கும் திறந்துவிடப் படுவதாகவும், அதனால் அதன் கட்டணம் உயர்த்தப்படும் என்றும் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வரும் செய்தியை அந்த பல்கலைக்கழகம் மறுத்துள்ளது.

வாட்ஸ் அப்பில் பரவி வரும் அச்செய்தி உண்மையல்ல என்று அந்தப் பல்கலைக்கழகத்தி துணை வேந்தர் பேராசிரியர் டத்தோ டாக்டர் ஹசான் சைட் தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இனி மலாய் மாணவர்கள் பயில பிரத்தியேகமாக ஒரு பல்கலைக்கழகம் இல்லை; இனி UiTM-மில் டிப்ளோமா கல்வியை மேற்கொள்ளக் கூட 27 ஆயிரம் ரிங்கிட் கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என அந்த வாட்ஸ் அப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker