Latestமலேசியா

இன்று நவராத்திரி ஆரம்பம்: விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

கோலாலம்பூர், அக்.10- நவராத்திரியின் விரதத்தைப் போன்று எளிமையானது வேறு ஏதுமில்லை எனலாம். அதே நேரம் மிகுந்த பலன்களைத் தரக்கூடியது நவராத்திரி விரதம் என்கின்றது புராணங்கள்.

நவராத்தியின் ஒன்பது நாட்களும் விரதம் இருப்பவர்கள் உபவாசியாக இருந்து பூஜித்த பிறகே உணவருந்த வேண்டும். பிரதமைத் திதியில் ஹஸ்த நட்சத்திரம் கூடுமானால் அது உன்னதமான நாளாகும்.

அந்நாளில் தேவி தன்னைப் பூஜித்தவருக்கு வேண்டியவற்றை எல்லாம் கொடுப்பாள் என்று சொல்வார்கள். நவராத்திரி வழிபாடு சக்தி மகிமையை விளக்கும் மனிதனின் முக்கிய தேவைகளான கல்வி, செல்வம், வீரம் இம்மூன்றையும் வேண்டி அவற்றுக்கு அதிபதிகளான சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை என்று மூன்று சக்தி அம்சங்களையும் வழிபடுதலே இவ்விரதத்தின் நோக்கமாகும்.

முதல் நாட்களில் வீரத்தையும் தைரியத்தையும் வேண்டி பராசக்தியை வழிபடுதல் வேண்டும். அடுத்த மூன்று நாட்களும் செல்வத்தை வேண்டி மகாலெட்சுமியை வழிபடவேண்டும். இறுதி மூன்று நாட்களும் கல்வி, அறிவு, சகல கலை ஞானங்கள் என்பவற்றை வேண்டிச் சரஸ்வதி தேவையை வழிபட வேண்டும்.

சுமங்கலிப் பெண்களை இவ்விரத நாட்களில் வீட்டுக்கு அழைத்து அவர்களைப் பராசக்தியாகப் பாவித்து கொலுவின் அருகில் அமரச் செய்து வணங்கி மஞ்சள்,குங்குமம்,பட்டு,நாணயம், தாம்பூலம் என்பவற்றை வழங்குவர்.

நவராத்திரி காலத்தில் எண்ணெய் தேய்த்து முழுகுதல் விலக்கப் பட்டுள்ளது. ஊசி நூல் கொண்டு தைத்தலும் கூடாது. புரட்டாசி சனி விரதம் இந்த நவராத்திரி நாட்களில் வரும் போது எண்ணெய் தேய்க்காது நீராடி அந்த விரதத்தை கைக்கொள்ளலாம். எண்ணெய் எரித்து வழிபடுதலும் செய்யலாம்.

நவராத்திரி விரதத்தை முறையாக கைக்கொள்ள விரும்புவோர் முதலெட்டு நாட்களிலும் பகலில் உணவின்றி இரவில் பூஜை முடிந்த பின் பால்பழம் பலகாரம் என்பவற்றை உண்டு, நவமியில் உபவாசமிருந்து பத்தாம் நாள் விஜயதசமியன்று காலை எட்டரை மணிக்கு முன் பாரணை செய்தல் வேண்டும்.

முடியாதவர்கள் முதலெட்டு நாளிலும் ஒருநேர உணவுண்டு கடைசி நாளில் பால் பழம் மட்டும் கொள்ளலாம் நவராத்திரி விரதத்தைப் போன்று எளிமையானதும் அதேநேரம் மிகுந்த பலன்களைத் தரக்கூடியதும் வேறு விரதங்கள் இல்லை என்கின்றது புராணம்.

தனம், தானியம், நிலையான இன்பம் , நீண்ட ஆயுள்,ஆரோக்கியம் ,சொர்ர்க்கம், மோட்சம் என ஒரு மனிதனுக்கு வேண்டிய அனைத்தையும் தரக்கூடிய விரதம் நவராத்திரி விரதம்.
குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் கிட்டும்.

படிப்பில் மந்தமாக இருப்பவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால் உயர்ந்து நிலையை அடையலாம். ஒன்பது நாட்களுக்கு வழிபட இயலாதவர்கள் அஷ்டமியன்று துர்கையை வழிபட்டு அன்று இரவு விழித்திருந்தால் அவர்களின் வாழ்க்கையை துர்காதேவியானவள் கண் விழித்துக் காப்பாள்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker