Latestஉலகம்

ஐ.நா. தூதர் நிக்கி ஹாலே ராஜினாமா! அதிபர் பதவிக்கு போட்டியிட திட்டமா?

வாஷிங்டன், அக்.10- ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் தூதர் பதவியை இந்திய வம்சாவளி பெண்ணான நிக்கி ஹாலே ராஜினாமா செய்துள்ளார்.

193 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்காவின் 29-ஆவது தூதராக இந்திய வம்சாவளி பெண்ணான நிக்கி ஹாலே கடந்த 2017ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

அமெரிக்காவின் அதிபராக ஒபாமா பதவி வகித்த காலக் கட்டத்தில் அமெரிக்காவின் தென் கரோலினா மாநிலத்தில் 116 ஆவது ஆளுனராகவும் பதவி வகித்து வந்த நிக்கி ஹாலே, ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கா தூதர் பதவியை நேற்று ராஜினாமா செய்துள்ளார்.

குடியரசுக் கட்சியில் அரசியல் செல்வாக்கு மிக்கவராக விளங்கி வரும் நிக்கி ஹாலே, 2020 ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலி வேட்பாளராக போட்டியிடும் நோக்கத்துடன் தான் இப்போது பதவி விலகியுள்ளார் என்று ஒரு தகவல் வெளியானது. எனினும், அதனை சூசகமாக அவர் மறுத்துள்ளார்.

எட்டு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து அரசியலில் பணி செய்து வருகிறேன். சற்று இடைவேளை தேவைப்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

நிக்கி ஹாலேயின் ராஜினாமாவை அதிபர் டிரம்ப் ஏற்றுக்கொண்டார். மேலும் நிக்கி ஹாலே ஆற்றிய பணிகளை அதிபர் டிரம்ப் பெரிதும் பாராட்டினார்.

அடுத்த இருவாரங்களில் நிக்கி ஹாலேயிக்கு பதிலாக புதிய தூதை தாம் நியமிக்கவிருப்பதாக அவர் சொன்னார். அதேவேளையில் பாதுகாப்புத் துறையின் துணை ஆலோசகராக இருந்த டினா போவெல் புதிய தூதராக நியமிக்கப்படக் கூடும் என்று தெரிகிறது.

அதேவேளையில் தம்முடைய மகள் இவாங்கா சிறந்த தூதராக விளங்க முடியும் என்று தாம் கருவதாகவும் ஆனால் அவரை நியமித்தால் வாரிசு அரசியல் நடத்துவதாக தம்மீது குற்றஞ்சாட்டுவார்கள் என்றும் டிரம்ப் கூறினார்.

மேலும் நிக்கி ஹாலே பற்றிக் குறிப்பிட்ட அதிபர் டிரம்ப், “சிறிது காலம் தமக்கு ஓய்வு தேவரென்று நிக்கி கூறினார். அதை நான் ஏற்றுக் கொண்டேன். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் நீங்கள் மீண்டும் திரும்பவேண்டும். வேறு பதவிகளில் உங்களின் சேவை தேவைப்படுகிறது என்று நான் நிக்கியிடம் கூறியுள்ளேன். என்னைப் பொறுத்தவரை சிறப்பு வாய்ந்தவர் நிக்கி. கொடுத்த பணிகளை அற்புதமாக செய்து முடிப்பதில் வல்லவர்” என்று குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker