Latestமலேசியா

பழைய இரும்பு விற்கும் நிறுவனத்தில் எரிவாயு கசிவு; 9 பேர் மருத்துவமனையில் அனுமதி

மீரி,அக்.10- லூத்தோங் என்ற பகுதியில் உள்ள பழைய இரும்புகள் விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றில் நச்சுக் கலந்த எரிவாயு கசிவு ஏற்பட்டதால் மூச்சுத் திணறலுக்கு இலக்கான அந்நிறுவன தொழிலாளர்கள் 9 பேர் மீரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மீரி மருத்துவமனையில் இருந்து தமது தரப்புக்கு நண்பகல் 12.28 மணிக்கு அழைப்பு வந்ததாக மீரி தீயணைப்பு, மீட்புத் துறைத் தலைவர் லாவ் போ கியோங் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டதோடு அவர்களது தொண்டைப் பகுதி வீங்கியதாக தெரிவிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது, மண்வாரி இயந்திர ஓட்டுநர் தற்செயலாக அங்கிருந்த குளோரின் எரிவாயு கொள்கலனை மோதியதன் விளைவாக இச்சம்பவம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சம்பவம் நிகழ்ந்த தலத்திற்குச் சென்ற தீயணைப்பு மீட்புத் துறையினர் நீரைப் பயன்படுத்தி கசிந்த குளோரின் எரிவாயுவை கரையச் செய்துள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker