Latestமலேசியா

அம்னோ-பாஸ் கட்சிக்குள் பண பரிமாற்றமா? புகார் செய்தால் விசாரணை தொடங்கப்படும்!

கோலாலம்பூர், அக்.11- 1எம்டிபி நிறுவனத்திற்கு சொந்தமான ரிம.2.5 மில்லியன் தொகையை அம்னோ கட்சியிலிருந்து பாஸ் கட்சிக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக திரெங்கானு அமானா நெகாரா கட்சியின் இளைஞர் பிரிவு போலீசில் புகார் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அவ்விவகாரம் தொடர்பில் எவ்வித புகாரும் செய்யப் பட்டதாக தம்மிடம் தெரிவிக்கப் படவில்லை என்று தேசிய போலீஸ் படையின் துணைத் தலைவரான டான்ஶ்ரீ நூர் ரஷீட் இப்ராஹிம் கூறினார்.

“அது குறித்து போலீஸ் புகார் செய்யப் பட்டிருந்தால், நாங்கள் அது குறித்து விசாரணையை மேற்கொள்வோம். அதன் பின்னரே, அவ்விவகாரம் தொடர்பிலான மேல் விசாரணையை வணிகக் குற்ற விசாரணை துறை மேற்கொள்ளுமா அல்லது மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் மேற்கொள்ளுமா என்பது குறித்து முடிவெடுக்கப் படும்” என்று அவர் செய்தியாளர்களிடம் சொன்னார்.

1எம்டிபிக்கு சம்பந்தப்பட்ட பணத்தை, அம்னோ கட்சி பாஸ் கட்சிக்கு பரிமாற்றம் செய்துள்ளது தொடர்பில் திரெங்கானு மாநில அமானா நெகாரா கட்சியின் இளைஞர் பிரிவு போலீசில் புகார் செய்துள்ளது என்று அக்கட்சியின் இளைஞர் பிரிவின் தொடர்பு இயக்குநர் முவாமார் கட்டாஃபி நஸிர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையில், முன்னாள் துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடியை போலீஸ் துறை விசாரணை செய்யவில்லை என்று நூர் ரஷீட் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker