Latestமலேசியா

கட்சி மாறினார் லாபுவான் எம்பி ரோஸ்மான்!

லாபுவான்,அக்.11- லாபுவான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரோஸ்மான் இஸ்லி அம்னோவில் இருந்து வெளியேறி சபா வாரிசான் கட்சியில் இணைந்துவிட்டதாக உறுதிப்படுத்தியுள்ளார்.

சபாவை தளமாகக் கொண்ட வாரிசான் கட்சியில் உறுப்பினராக இணைவதற்கான பாரத்தை அந்தக் கட்சியின் துணைத் தலைவர் டத்தோ டேர்ரல் லெய்கிங்கிடம் அவர் ஒப்படைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2013-ஆம் ஆண்டிலிருந்து லாபுவானின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வரும் ரோஸ்மான் தனது தொகுதியின் சிறந்த எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு ஆழ்ந்து சிந்தித்து இந்த முடிவை எடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker