Latestமலேசியா

குட்டையில் மிதந்த சடலம் மீட்பு!

மஞ்ஜோங்,அக்.11- கொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் ஆடவர் ஒருவரின் சடலம் பந்தாய் ரெமிஸ், ஜாலான் குவாரி தஞ்ஜோங் பத்துவில் அமைந்துள்ள குட்டை ஒன்றில் மிதக்கக் கண்டெடுக்கப்பட்டது.

நேற்று பிற்பகல் 2.45 மணிக்கு தலையும் கால்களும் இரும்புக் கம்பியால் கட்டப்பட்ட நிலையில் அச்சடலம் பொது மக்கள் பார்த்ததாக மஞ்ஜோங் மாவாட்ட போலீஸ் தலைவர் முகமட் ஹனிப் ஒத்மான் தெரிவித்தார்.

தீயணைப்பு மீட்புப் படை வீரர்களின் உதவியால் குட்டையிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்ட அச்சடலம் கான்வஸ் துணியால் சுற்றப்பட்டிருந்தது. அதுமட்டுமில்லாமல் சடலம் குட்டைக்குள் மூழ்க வேண்டும் என்பதற்காக கால்களில் பெரிய கற்களும் கட்டப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இறந்தவரின் வயது 40-லிருந்து 50 வயதுக்குள் இருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.எனினும், அவரது அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை. அவர் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பே இறந்திருக்கிறார் என நம்பப்படுகிறது.

இதற்கிடையே, குற்றவாளியை கண்டறியும் வகையில் சம்பவ இடத்தில் மோப்ப நாய்களை விட்டு சோதனை நடத்தப்படுவதாக முகமட் ஹனிப் கூறினார்.

சடலம் சவப்பரிசோதனைக்காக ஈப்போ, ராஜா பெர்மாய்சூரி பைனூன் மருத்துவமனையிலன் தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker