Latestமலேசியா

கைப்பேசில் ஆபாசப் படங்கள் வைத்திருந்த ஆடவன்!

தெலுக் இந்தான்,அக்.11- தனது கைப்பேசியில் 14 ஆபாச படங்களை வைத்திருந்த வேலையில்லா ஆடவன் ஒருவன் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளான்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11.10 மணியளவில் ஹீலிர் பேரா மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 28 வயது முகமட் அய்மான் தான் அப்துல்லாவுக்குச் சொந்தமான கைபேசியில் ஆபாச படங்கள் இருந்ததை போலீசார் பார்த்திருக்கின்றனர்.

அதையடுத்து குற்றவியல் சட்டம் செக்சன் 292(a)-வின் கீழ் அய்மான் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் மூன்றாண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

மாஜிஸ்திரேட் ஷாடாத்துல் கமிலா ஸாக்காரியா முன்னிலையில் அவன் மீதான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அவன் அதனை மறுத்து விசாரணை கோரினான்.

அரசு தரப்பு துணை வழக்கறிஞர் நூர் அஸிமா சே இஸ்மாய்ல் அய்மான் மீது வழக்கைத் தொடுத்த வேளை அவன் சார்பில் வழக்கறிஞர் பிரான்சிஸ் சின்னப்பன் ஆஜராகினார்.

தனது தாயாரை பார்த்துக்கொள்ள வேண்டியுள்ளதால் தனக்கு குறைந்தபட்ச தண்டனனை விதிக்குமாறு அவன் நீதிபதியைக் கேட்டுக் கொண்டான். ஈராயிரம் ரிங்கிட் ஜாமின் தொகையிலும் ஒரு தனிநபரின் உத்தரவாதத்தின் பேரிலும் அய்மான் விடுவிக்கப்பட்டான். இதன் வழக்கு விசாரணை நவம்பர் 13-ஆம் தேதி மீண்டும் செவிமடுக்கப்படும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker