Latestமலேசியா

கோயிலில் அன்வார் தடுக்கப்பட்டாரா? பரவும் VIDEO: கோயில் கமிட்டி விளக்கம்

போர்ட்டிக்சன், அக்.11- பண்டார் சுங்காலாவில் அமைந்துள்ள ஶ்ரீ மகா மாரியம்ம்மன் ஆலயத்திற்குள் நுழைவதில் இருந்து பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தடுக்கப்பட்டதாக காணொளி ஒன்று பரவி வருவது குறித்து அந்த ஆலயத்தின் நிர்வாகக் குழு தனது மறுப்பைத் தெரிவித்துள்ளது.

தற்போது அத்தகைய காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. இது குறித்து தாங்கள் விளக்கமளிக்க வேண்டியுள்ளது என்று கோயில் நிர்வாகக் குழு இணைத்தலைவர் என். பாலகிருஷ்ணன் கூறினார்.

ANWAR CHASED OUT! Anwar was chased out from a Hindu temple function in PD…

Posted by Malaysia Today மலேசியா டுடே on Sunday, 7 October 2018

அன்வாரின் பெயரைக் கொடுக்க வேண்டும் என்று விரும்பிய ஒரு தரப்பின் கைங்காரியம் இதுவென்று அவர் குற்றஞ்சாட்டினார்.

போர்ட்டிக்சன் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரான அன்வாரை, கோயிலின் நிலப் பிரச்னை தொடர்பாக விவாதிப்பதற்காக அக்டோபர் 7ஆம் தேதி கோயில் நிர்வாகம் அழைத்திருந்தது. இந்தச் சந்திப்பில் கலந்து கொள்ள அன்வாரும் இணக்கம் தெரிவித்திருந்தார் என்று பாலகிருஷ்ணன் கூறினார்.

அன்வார் கோயிலுக்கு வந்த போது மற்றொரு தரப்புடன் ஏற்பட்ட வாக்கு வாதத்தினால் தங்களுக்கு இடையே குழப்பம் ஏற்பட்டதாகவும் இதற்கும் அன்வார் வருகைக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்றும் அவர் விளக்கினார்.

நிலைமையை தணிக்க அன்வார் அங்கிருந்து புறப்படுவதற்கு முடிவு செய்தார். எனினும் தம்முடைய பிரதிநிதி ஒருவரை அனுப்பி நிலப் பிரச்சனை தொடர்பான தங்கள் கோரிக்கைகள் குறித்து கண்டறியவதாக அன்வார் வாக்குறுதி அளித்தார்.அந்த வகையில் அவருடைய பிரதிநிதியை நாங்கள் நேற்று சந்தித்தோம் என்று கோயில் தலைவர் பாலகிருஷ்ணன் சொன்னார்.

இதனிடையே அன்வாரின் பிரதிநிதியான ஆர். சுரேஷ்குமார், தாம் கோயில் நிர்வாகத்தினருடன் சந்திப்பு நடத்தியதை உறுதிப்படுத்தினார்.

”அன்வாரின் உத்தரவின் பேரில் தான் நான் இங்கு வந்தேன். அவர்களின் பிரச்னைகளை கேட்டு அறிந்து வருமாறு அவர் சொன்னார். மேலும் முன்பு கோயில் இரு தரப்புகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறையும் சுமூகமாகத் தீர்த்து வைக்கும்படியும் என்னிடம் அவர் கேட்டுக் கொண்டார் என்று சுரேஷ் குமார் தெரிவித்தார்.

மேலும் இடைத்தேர்தல் முடிந்த பின்னர் அன்வாரைச் சந்தித்துப் பேச கோயில் நிர்வாகம் விருப்பம் தெரிவித்துள்ளது என்றும் அவர் சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker