Latestமலேசியா

சமையல் எரிவாயு கொள்கலன் வெடித்து தாதி படுகாயம்!

பீடோர்,அக்.11- சுங்கை அரசு கிளினிக் பணியாளர்களுக்கான குடியிருப்பில் உள்ள வீடொன்றில் காலைச் சிற்றுண்டி தயாரிப்பதற்காக தாதி ஒருவர் சமையல் அறையில் எல்லாவற்றையும் தயார் செய்து கொண்டிருந்த சமயத்தில் சமையல் எரிவாயு கொள்கலன் திடீரென வெடித்ததில் அந்தத் தாதிக்கு கடுமையான காயங்களுக்கு இலக்கானார்.

இந்தச் சம்பவம் இன்று விடியற்காலை 5 மணி அளவில் நிகழ்ந்தது. சம்பந்தப்பட்ட தாதிக்கு உடலின் பின்புறத்திலும் கால்களிலும் தீப்புண் காயங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து தமது தரப்புக்கு காலை மணி 5.26-க்கு தகவல் கிடைத்ததாக பீடோர் தீயணைப்பு மீட்புப்படை அமலாக்கப் பிரிவுத் தலைவர் ஷாரின் மூசா தெரிவித்தார்.

உடனே சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று பார்த்தபோது அந்த தாதி சமையல் அறையிலிருந்து தூரத்தில் விழுந்து கிடந்தார். எரிவாயு கொள்கலன் வெடித்ததில் அவர் தூரமாக வீசி எறியப்பட்டிருக்கிறார் என நம்பப்படுகிறது. அவர் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

சமையல் அறையின் சன்னல் கண்ணாடிகள் உடைந்து உட்கூரைப் பகுதி எல்லாம் சேதமடைந்துள்ளது. இந்த சம்பவத்தின் காரணத்தைக் கண்டறிய வெடித்த எரிவாயு கொள்கலன் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker