Latestமலேசியா

சலவை மையத்தில் கொள்ளையடித்த இளைஞனுக்கு 12 ஆண்டு சிறை, 9 பிரம்படி

சுங்கை பட்டாணி,அக்.11- கடந்த செப்டம்பரில் தானியங்கி சலவை மையத்திலும் 24 மணி நேர மளிகைக் கடையிலும் கொள்ளைச் சம்பவத்தின் ஈடுபட்டது தொடர்பில் மூன்று குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கிய இளைஞன் அக்குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதை அடுத்து அவனுக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையையும், 9 பிரம்படிகளையும் சுங்கை பட்டாணி செஷன்ஸ் நீதிமன்றம் விதித்து தீர்ப்பளித்தது.

நீதிபதி என்.பிரிசில்லா ஹேமமாலினி முன்னிலையில் குற்றச்சாட்டுகள் வாசிக்கபட்டபோது அவற்றை 21 வயது முகமட் சூல்பீக்கார் நஸ்ரிக் முகமட் ஸாஹிர் ஒப்புக்கொண்டான்.

செப்டம்பர் 10-ஆம் தேதி, காலை 7.15 மணி அளவில் மளிகைக் கடையில் இருந்த பெண்ணிடம் பாராங் கத்தி முனையில் கைப்பேசியை சூல்பீக்கார் தனது இரு சகாக்களுடன் கொள்ளையடித்துள்ளான். அதன் பிறகு, மறூநாள் காலை 7 மணியளவில் பண்டார் புத்ரி ஜெயாவிலுள்ள சலவை மையத்தில் 37 வயது பெண்ணை பாராங் கத்தி வைத்து மிரட்டி அவரிடமிருந்து நகைகளைப் பறித்துள்ளான்.

அதே நாளில், ஜாலான் கிளப் சிந்தா சாயாங்கிலுள்ள் கடையொன்றி 17 வயது இளைஞரின் கைப்பேசியையும், 1,500 ரிங்கிட் பணத்தையும் அவன் தன் சகாக்களுடன் சேர்ந்து கொள்ளையடித்துள்ளான். சூல்பீக்காருடன் சேர்ந்து இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நண்பனுக்கு சூல்பீக்காருக்கும் அதே தண்டனைகள் விதிக்கப்பட்டன. அவர்களுடைய இன்னொரு நண்பனை போலீசார் தீவிரமாகத் தேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker