Latestஉலகம்

“நான் ஒபாமா போல் கையால் ஆகாதவன் அல்ல- டிரம்ப் ஆவேசம்

வாஷிங்டன், அக்.11- ”முன்னாள் அதிபர் ஒபாமா போல நான் கையாலால் ஆகாதவனாக இருக்க மாட்டேன். சீனாவுக்கு தக்க பதிலடி கொடுப்பேன்” என அமெரிக்கா அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.

தென் சீனக் கடல் பகுதி, எரிசக்தி வளம், மீன்வளம் மற்றும் முக்கிய கடல்வழிப் பாதையாக திகழ்கிறது. தென் சீனக்கடல் , கிழக்கு சீனக்கடல் பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. குறிப்பாக, தென்சீனக் கடல் பகுதி தங்களுக்கே உரிமையானது என்பது சீனாவின் வாதம்.

ஆனால் வியட்நாம், பிலிப்பைன்ஸ்,, மலேசியா, புருணை மற்றும் தைவான் ஆகிய நாடுகள் இக்கடல் பகுதியில் தங்களுக்கும் உரிமையுள்ளதாக கூறி வருகின்றன. ஒபாமா அதிபராக இருந்த போது தென் சீனக்கடலில் தனது போர்க் கப்பல்களை நிறுத்தி சீனாவுக்கு மிரட்டல் விடுத்தார்.

இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ கடந்த வாரம் சீனா பயணம் மேற்கொண்டார். அமெரிக்கா திரும்பிய அவர், அதிபர் டிரம்ப்புடன் ஆலோசனை நடத்தினார்.

தென் சீனக்கடல் விவகாரத்தில் சீனாவின் அட்டூழியத்தை வேடிக்கை பார்க்கப் போவதில்லை. முன்னாள் அதிபர் ஒபாமா அரசைப் போல் இவ்விவகாரத்தில் நான் கையால் ஆகாதவனாக இருக்க மாட்டேன். சீனாவுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம். பாம்பியோவின் சீன பயணத்தின் போது நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை இவ்வாறு ஆதிபர் டிரம்ப் சாடினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker