Latestமலேசியா

போர்ட்டிக்சன் இடைத்தேர்தல்: பாஸ் வேட்பாளருக்கு ஐ.பி.எஃப் ஆதரவு!

போர்ட் டிக்சன், அக்.11- அக்டோபர் 13-ஆம் தேதியன்று நடைபெறவிருக்கும் போர்ட்டிக்சன் நாடாளுமன்ற இடைத் தேர்தலில், பாஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு மலேசிய இந்தியர் முன்னேற்ற முன்னணி கட்சி ( ஐ.பி.எஃப்) ஆதரவு தெரிவித்துள்ளது.

போர்ட்டிக்சன் தொகுதியிலுள்ள தங்களின் ஆதரவாளர்கள், பதவி ஓய்வு பெற்று விட்ட விமானப் படை அதிகாரியான முகமட் நஸாரி மொக்தாருக்கு வாக்காளிக்க வேண்டும் என்று ஐ.பி.எஃப் கட்சி அறிவுறுத்தும் என்று அக்கட்சியின் உதவித் தலைவரான எஸ்.விஸ்வநாதன் தெரிவித்துக் கொண்டார்.

“கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மத்திய செயலவை குழு கூட்டத்தில், போர்ட் டிக்சன் இடைத் தேர்தலில் பாஸ் வேட்பாளருக்கு எங்களின் ஆதரவை வழங்க வேண்டும் என்று நாங்கள் முடிவெடுத்தோம். இது அவசர முடிவல்ல” என்று அவர் விளக்கினார்.

“இந்த இடைத் தேர்தலில் மட்டுமல்ல, எதிர்வரும் காலங்களில், நாங்கள் பாஸ் கட்சியுடன் இணைந்து செயல்படவுள்ளோம்” என்று அவர் சொன்னார்.

“பாஸ் கட்சி நடத்திய முக்தாமார் நிகழ்வில் கலந்துக் கொள்ளுமாறு, அக்கட்சி எங்களுக்கு அழைப்பு விடுத்தது. அந்த அழைப்பை நாங்கள் ஏற்றுக் கொண்டு, அம்னோ மற்றும் மஇகாவுடன் அந்த நிகழ்வில் கலந்துக் கொண்டோம்.

“அதுமட்டுமல்லாது, எங்களுடன் கலந்து பேசி, அவர்களுக்காக நாங்கள் போர்ட் டிக்சனில் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று பாஸ் கட்சி கேட்டுக் கொண்டது. இதன் அடிப்படையில், நாங்கள் எங்கள் ஆதரவை பாஸ் வேட்பாளருக்கு வழங்குகிறோம்” என்று விஸ்வநாதன் கூறினார்.

போர்ட்டிக்சன் தொகுதியில் உள்ள இந்தியர்களின் வீடுகளுக்கு நேரிடையாக சென்று, ஐ.பி.எஃப் கட்சியினர் பாஸ் வேட்பாளருக்கான ஆதரவை திரட்டவிருப்பதாக அவர் தெரிவித்துக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker