Latestமலேசியா

மலேசியாவில் ரிம.1,000 கோடி முதலீடு செய்யும் சீன நிறுவனம்

கோலாலம்பூர்,அக்.11- அடுத்த 10 ஆண்டுகளுக்குள் மலேசியாவின் அடிப்படை வசதிக்கான கட்டுமானத் துறை மற்றும் அதி உயர் தொழில்நுட்பம் கொண்ட இயந்திரங்கள் போன்ற தொழில்துறைகளில் 1,000 கோடி ரிங்கிட்டை முதலீடு செய்யவிருப்பதாக சீனாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.

பசுபிக் கட்டுமான குழுமம்(சி.பி.சி.ஜி) என்ற அந்த நிறுவனத்தின் நிறுவனர் யான் இதனை அறிவித்துள்ளார்.

இந்தப் பிராந்தியத்தில், போட்டியாற்றலுடன் கூடிய திறனும், வர்த்தகத்திற்கான சாதகமான சூழலையும் கொண்ட நாடாக மலேசியா விளங்குகிறது. அதன் அடிப்படை ஆதாரங்கள் வலுவாக உள்ளன.

அடிப்படை வசதிக்கான கட்டமைப்பு மிகச் சிறப்பாக அமைந்துள்ளன. பன்மொழித் திறன் கொண்ட மிகப் பெரிய வளம் இங்கே இருக்கிறது என்று யான் ஜி ஹீ சொன்னார்.

எனவே அடுத்த 10 ஆண்டுகளில் 1,000 கோடி ரிங்கிட்டை தமது நிறுவனம் இங்கு முதலீடு செய்யத் திட்டமிட்டிருக்கிறது. அடிப்படை வசதி மேம்பாடு, அதி உயர் தொழில்நுட்பம் கொண்ட இயந்திரத் தொழில் மற்றும் கல்வித் துறைகளில் முதலீடு செய்வோம் என்றார் அவர்.

உலகின் 500 முன்னணி நிறுவனங்களில் இந்த சி.பி.சி.ஜி நிறுவனம் 98-ஆவது இடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker