Latestமலேசியா

ரிம3 கட்டணம் தராமல் ஊழியரை தாக்கிய ‘டத்தோ’!- போலீஸ்- (video)

கோலாலம்பூர்,அக்.11- செப்டம்பர் 18-ஆம் தேதி, கார் நிறுத்திமிடம் ஒன்றின் ஊழியரை ஆடவர் ஒருவர் தாக்கிய காணொளி சமூக ஊடகங்களில் வைரல் ஆகிய பிறகு தற்போது அச்சம்பவம் குறித்து போலீஸ் முதல் முறையாக வாய்த் திறந்துள்ளது.

5 நட்சத்திர தங்கும் விடுதி ஒன்றில் கார் நிறுத்தும் தளத்தில் தனது காரை நிறுத்திய ஆடவர் அதற்கான கட்டணமான 3 ரிங்கிட்டை செலுத்தாததால், அவர் தனது காரை எடுத்துக் கொண்டு வெளியேறும்போது தடுப்பு வேலியை திறக்க மறுத்ததாக அந்த ஆடவரால் தாக்கப்பட்ட ஊழியர் போலீசில் புகார் அளித்ததாக பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ருசியான் காலிட் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து சம்பவம் நிகழ்ந்த மறுநாளே அதாவது செப்டம்பர் 19-ஆம் தேதியன்று சம்பந்தப்பட்ட ஊழியர் போலீசில் புகார் அளித்திருக்கிறார். அவருக்கு கடுமையான காயம் ஏதும் ஏற்படவில்லை. கையில் மட்டும் காயங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், அந்த ஊழியரை தாக்கிய ஆடவரை போலீசார் அடையாளம் கண்டுவிட்டதாகவும், அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். விசாரணை முடிந்ததும் இந்த வழக்கு அரசு தரப்பு துணை வழக்கறிஞரின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

This incident happended on 18-9-2018 at a car park office in a 5 star hotel in Kuala Lumpur. The poor staff had to undergo this treatment from this guy just because he thinks he is a big shot vvips, or something like that. I am sure a police report must have been made but no action has been taken till todate. Please viral this so this mad culprit is brought to justice. Pls find cctv and pic.

Posted by Michael K S Foo on Tuesday, 9 October 2018

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker