உலகம்

ரோஸ்மாவின் நகைகள்; லெபனான் வியாபாரிக்கு சொந்தமானது எவை? -நீதிமன்றம்

கோலாலம்பூர், அக்.11- முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பின் வீட்டில் போலீஸ் சோதனை மேற்கொண்ட போது, அவரின் துணைவியார் டத்தின்ஶ்ரீ ரோஸ்மா மன்சோரின் நகைகள் பறிமுதல் செய்யப் பட்டன.

போலீசாரால் கைப்பற்ற அந்த நகைகளில், ரிம.60 மில்லியன் மதிப்புக் கொண்ட லெபனான் நாட்டைச் சேர்ந்த நகை வியாபாரியின் நகைகளும் பறிமுதல் செய்யப் பட்டதா, இல்லையா? என்பது குறித்து அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என்று இன்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அந்த லெபனான் நாட்டைச் சேர்ந்த நகை வியாபாரியிடமிருந்து ரோஸ்மா நகைகளை தேர்வு செய்வதற்காக பெற்றிருந்தார் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

நஜிப்பின் வீடுகளில் நடத்தப்பட பரிசோதனைகளின் போது, குளோபல் ரோயல்டி டிரேடிங் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான 44 நகைகள் பறிமுதல் செய்யப் பட்டதா? என்பது குறித்து அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி ஆணையர் வோங் சீ லின் உத்தரவிட்டார்.

ரோஸ்மாவின் வீட்டிலிருந்து 12,000 நகைகள் பறிமுதல் செய்யப் பட்டதாகவும், அவை ரிம.440 மில்லியன் மதிப்புக் கொண்டவை என்றும் கூறப்பட்டுள்ளது.

“இன்னும் இரு வாரங்களுக்குள், பறிமுதல் செய்யப்பட்ட நகைகளில், அந்த லெபனான் நகை வியாபாரிக்குச் சொந்தமான 44 நகைகள் குறித்த விவரங்களை அரசாங்கம் பகிர வேண்டும். அந்த நகைகளை அடையாளம் காட்ட, ரோஸ்மாவின் உதவியை அரசாங்கம் உபயோகப் படுத்த வேண்டும்” என்று வோங் கூறினார்.

அவ்வழக்கு தொடர்பான விசாரணை அடுத்தாண்டு மார்ச்சு மாதம் 4-ஆம் மற்றும் 5-ஆம் தேதி தொடரும் என்று கூறிய அவர், அந்த நகை வியாபாரியின் வழக்கை எதிர்த்து ரோஸ்மா தொடங்கிய வழக்கை நிராகரித்தார்.

அவ்விவகாரம் தொடர்பில் அரசாங்கம் பதிலளித்த பின்னர், அந்த நகை குறித்து ரோஸ்மா மீண்டும் வழக்கு தொடங்கலாம் என்றும் அவர் சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker