Latestஉலகம்

ஷேக் ஹசினாவை கொல்ல முயன்ற கலிதா ஜியா மகனுக்கு ஆயுள்சிறை!

டாக்கா, அக்.11- வங்காளதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசினாவை கொல்ல முயன்ற குண்டு வீச்சு வழக்கில் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மகன் உள்பட 19 பேருக்கு ஆயுள் சிறைத்தண்டனையும் இதர 19 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

வங்காளதேசத்தில் இரு பெரும் பெண் அரசியல் தலைவர்களாக ஷேக் ஹசினாவும்- கலிதா ஜியாவும் உள்ளனர். இவர்களில் தற்போதைய பிரதமராக பதவி வகிக்கும் ஷேக் ஹசினா மறைந்த முன்னாள் பிரதமரும் வங்காளதேசம் என்னும் தனிநாடு உதயமாக வித்திட்டவருமான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மகளாவார்.

அவாமி வீக் கட்சியின் தலைவரகவும் ஷேக் ஹசினா பதவி வகித்து வருகிறார். மற்றொரு பெண் அரசியல் தலைவரான கலிதா ஜியா வங்களதேசத்தின் முன்னாள் அதிபர் ஜியாவுர் ரஹ்மானின் மனைவியாவார்.

வங்காளதேசம் தேசியவாத கட்சியின் தலைவராகவும் அந்நாட்டின் ராணுவ தளபதியாகவும் இருந்த ஜியாவுர் ரஹ்மான் கடந்த 1981 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட பின் கலிதா ஜியா தீவிர அரசியலில் குதித்தார்.

இந்நிலையில் 21-8- 2004 ஆம் தேதியன்று கலிதா ஜியா பிரதமராக பதவி வகித்த போது எதிர்க்கட்சியான அவாமி லீக் கட்சியின் மாபெரும் பேரணி நடத்தியது.

இந்த பேரணியின் போது எதிர்க்கட்சி தலைவர் ஷேக் ஹசினாவை குறி வைத்து நடத்தப்பட்ட கையெறி குண்டு தாக்குதலில் அந்நாட்டின் முன்னாள் அதிபர் ஜில்லூர் ரஹ்மானின் மனைவியும் அவாமி லீக் கட்சியின் மகளிர் அணி தலைவியுமான ஐவி ரஹ்மான் உள்பட 24 பேர் உயிரிழந்தனர். சுமார் 500 பேர் காயமடைந்தனர்.

இத்தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக ஷேக் ஹசினா காயங்களுடன் உயிர் தப்பினார் எனினும் அவரது காதுகளில் கேட்கும் திறன் பறிபோனது. இச்சம்பவம் தொடர்பாக அந்நாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் முன்னாள் உள்துறை அமைச்சர் லுத் போஸ்மான் பாபர் ஆகியோர் மீது விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இவர்களில் கலிதா ஜியாவின் மகன் தாரிக் தற்போது லண்டனில் வாழ்ந்து வருகிறார். இவ்வழக்கில் அவர் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். பயங்கரவாத அமைப்பினரின் துணையுடன் ஷேக் ஹசினாவை கொல்ல முயன்றதாக விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker