Latestமலேசியா

அன்வாருக்கு கமலஹாசன் ஆதரவு; வீடியோவில் பிரசாரம்!- (video)

கோலாலம்பூர்,அக்.12- நாளை போர்ட்டிக்சன் நாடாளுமன்ற இடைத்தேர்தலின் வாக்களிப்பு நாள். இந்நிலையில், பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு இந்திய வாக்காளர்களின் ஆதரவைத் திரட்டும் வண்ணம் உலக நாயகன் கமலஹாசனின் காணொளி பரப்புரை அமைந்துள்ளது.

அந்தக் காணொளி நேற்றிரவு சமூக ஊடகங்களில் அதிவேகத்தில் வைரல் ஆகிய நிலையில் பலரும் அதற்கு பலவாறு கருத்துரைத்து வருகிறார்கள்.

கலைத்துறையில் உலகம் போற்றும் அளவிற்கு தன்னை உயர்த்திக் கொண்ட கமலஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை அமைத்து அரசியல் வானில் பறக்கத் தொடங்கியிருக்கும் வேளையில், அவர் தமது தோழரான அன்வாருக்கு ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

கீழ்த்தட்டு மக்களின் உணர்வுகளை நன்கறிந்து வைத்திருக்கும் அன்வார் போன்ற தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவது மலேசியாவுக்கு ஒரு நற்செய்தி என அவர் கூறியுள்ளார். அதன் வழி அன்வாரின் அரசியல் பயணம் மட்டுமல்ல, நாட்டு மக்களின் வாழ்வும் சிறக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

போர்ட்டிக்சன் தொகுதியின் 75,000 வாக்காளர்களில் 21.4 விழுக்காட்டினர் இந்தியர்கள் ஆவர். அன்வாரை எதிர்த்து அறுவர் போட்டியிடுகின்றனர். அன்வார் போர்ட்டிக்சன் மக்களின் மனதில் நிற்கிறாரா? மக்களுடனான அவரது பயணம் தொடர்கிறதா? அவர் மீண்டும் நாடாளுமன்றம் வருவாரா என்ற கேள்விக்கு பதில் நாளை தெரிய வரும்!

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker