Latestஉலகம்

இந்தியா மீது பொருளாதாரத் தடையா? விரைவில் முடிவு – அதிபர் டிரம்ப்

வாஷிங்டன், அக்.12- அமெரிக்காவினால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட ரஷ்யாவிடமிருந்து அதி நவீன ஏவுகணைகள் வாங்க ஒப்பந்தம் மேற்கொண்ட இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிப்பதா, வேண்டாமா? என்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் ரஷ்ய ராணுவத் தலையீடு, அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா குறுக்கீடு செய்ததான குற்றச்சாட்டு உள்ளிட்ட காரணங்களால் ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது.

இந்நிலையில் கடந்த வாரம் ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வந்தார். 37 ஆயிரம் கோடிக்கு அதிநவீன ஏவுகணை வாங்குதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்குமா? என்று கேள்வி எழுந்தது.

இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும். நீங்கள் எதிர்பார்ப்பதை விட விரைவிலேயே கூட முடிவு எடுக்கப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். இந்நிகழ்வின் போது வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவும் உடனிருந்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker