Latest

கிரிக்கெட் வீரர் மலிங்காவின் பாலியல் தொல்லை! – அம்பலமாக்கிய சின்மயி!

கொச்சி, அக்.12- இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா, பெண் ஒருவரை பாலியல் ரீதியாக தொல்லைக்கு உள்ளாக்கியதாக பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.

வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என பாடகி சின்மயி கூறியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பல பிரபலங்களையும் இப்போது அவர் விட்டு வைக்கவில்லை.

இந்நிலையில் பெண் ஒருவர், இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்க தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறி பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அவரது பதிவையும் சின்மயி பகிர்வு செய்துள்ளார்.

அதில், அந்தப் பெண் கூறியிருப்பதாவது:

சில ஆண்டுகளுக்கு முன் நான் மும்பையில் இருந்தேன். அப்போது நான் தங்கியிருந்த ஹோட்டலில் என் தோழியும் தங்கியிருந்ததால் அவரை தேடினேன். அங்கே ஐபிஎல் சீசனில் பிரபலமாக இருந்த இலங்கை வீரர் என்னிடம் வந்து “உங்கள் தோழி எனது அறையில் இருக்கிறார்” என கூறினார்.

அதையடுத்து நான் அவரது அறைக்கு சென்றபோது தோழி அங்கு இல்லை. அப்போது கிரிக்கெட் வீரர் என்னை படுக்கையில் தள்ளி என் முகத்தின் அருகில் வந்தார்.

அவர் வாட்டசாட்டமாக இருந்ததால் அவரை எதிர்த்து என்னால் போராட முடியவில்லை. அப்போது ஹோட்டல் ஊழியர்கள் கதவை தட்டினர். எழுந்து போய் அவர் கதவை திறந்தவுடன் நான் வெளியே ஓடிவிட்டேன்.

இதை வைத்து அந்த வீரர் பிரபலமானவர் என்பதால் நான் வேண்டுமென்றே அவர் அறைக்கு சென்றதாக கூட சிலர் கூறலாம் என அப்பெண் பதிவு செய்திருந்ததை பாடகி சின்மயி பகிர்வு செய்ததன் வழி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker