Latestமலேசியா

டோல் இல்லா நெடுஞ்சாலை சாத்தியமில்லை! – துன் மகாதீர்

பாலி,அக்.12- டோல் கட்டணம் வசூலிக்காமல் நெடுஞ்சாலையை நிர்மாணிப்பது சாத்தியமே இல்லை என பிரதமர் துன் மகாதீர் கூறியுள்ளார்.

பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று டோல் இல்லா நெடுஞ்சாலையாகும். இந்த வாக்குறுதியில் தமக்கு உண்மையில் எள்ளளவும் உடன்பாடு இல்லை என அவர் தற்போது குறிப்பிட்டார்.

“நாங்கள் ஆட்சியைப் பிடிக்க மாட்டோம் என்று நினைத்து அந்த தேர்தல் வாக்குறுதியைத் தயாரித்தோம். ஆனால், இப்போது நாங்கள் தான் அரசாங்கம். இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது பெரும் சுமையாக இருக்கிறது.

“இந்த வாக்குறுதியை நான் அப்போதே எதிர்த்தேன். இலவசமாக நெடுஞ்சாலையை விடுவது சாத்தியம் இல்லை என்று எனக்கு நன்கு தெரியும். பெட்ரோல் விலையை உயர்த்தினால் மட்டுமே இலவச டோலை அமைக்க முடியும்” என ஆசியான் தலைவகளுக்கான கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“ஒருவேளை அரசு டோல் வசூலை நீக்கினால், யார் இருக்கும் நெடுஞ்சாலைகளை நிர்வகிப்பது? புதிய நெடுஞ்சாலைகளை யார் அமைப்பது?

“தனியார் தரப்பை நெடுஞ்சாலையை அமைக்கச் சொல்கிறீரா? அவர்கள் இலாபம் ஈட்டத்தான் பார்ப்பார்கள். நினைவில் கொள்ளுங்கள்!” என பிரதமர் சொன்னார்.

இங்கிலாந்தில் டோலுடன்கூடிய நெடுஞ்சாலை இல்லை. ஆனால், பெட்ரோலுக்கு அதிகமான வரியை இங்கிலாந்து அரசு மக்களிடமிருந்து வசூலிக்கிறது என அவர் சுட்டிக் காட்டினார். அதனால், பக்காத்தான் அரசு அதன் தேர்தல் வாக்குறுதிகளை மீண்டும் சரிப்பார்க்க வேண்டியுள்ளதென அவர் அறிவுறுத்தினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker