Latestமலேசியா

‘லக்சா’ நச்சுணவால் மேலும் 19 புதிய சம்பவங்கள்!

கோலாலம்பூர்,அக்.12- கடந்த வாரம் கெடா, பாலிங்கில் உள்ள ஒரு “லக்சா” கடையில் சாப்பிட்டதை அடுத்து மேலும் 19 பேர் நச்சுணவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், இந்த நச்சுணவுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80-ஆக உயர்ந்துள்ளது.

அந்த 80 சம்பவங்களில் பேராக்கைச் சேர்ந்த 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் உயிரிழந்துவிட்டனர். மேலும் கெடாவில் 25 பேரும், சிலாங்கூரில் 24 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். பாதிக்கப்பட்டோரில் 9 பேரின் நிலை சற்று மோசமாகவும், எஞ்சியவர்களின் உடல்நலம் தேறி வருவதாகவும் அவர் கூறினார்.

இந்த சம்பவங்களை அடுத்து மொத்தம் 10 உணவு மாதிரிகள் ஆய்வக பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு லக்சா மீ மாதிரிகள், நான்கு லக்சாவுக்கான குளம்பு மாதிரிகள், இரண்டு கீரை மாதிரிகள் அடங்கும். அந்தப் பரிசோதனையின் முடிவுக்காக தமது தரப்பு காத்திருப்பதாக ரோச் ஹிஷாம் குறிப்பிட்டார்.

நேற்று வரை 61 சம்பவங்கள் பாதிவாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker