Latestஇந்தியா

விஜய் மல்லையாவின் லண்டன் வீடு பறிமுதலா?

புதுடில்லி, அக். 12- வங்கி கடனைத் திரும்ப செலுத்தாத தொழில் அதிபர் விஜய் மல்லையாவின் லண்டன் வீட்டைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளது.

கர்நாடக மாநிலம், பெங்களூரை சேர்ந்தவர் விஜய் மல்லையா. இவர் பொதுத்துறை வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று அதை திரும்ப செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றார்.

லண்டனில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்துள்ள மல்லையாவை நாடு கடத்தும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது.

அவருக்கு சொந்தமான நிறுவனம் பெற்ற கடனைத் திரும்ப செலுத்தாததால் மல்லையாவுக்கு சொந்தமான லண்டன் வீட்டை பறிமுதல் செய்து கடன் தொகையை ஈடு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதையடுத்து லண்டன் வீட்டை மீட்க தனியார் நிதி நிறுவனத்திடம் கடன் பெறும் முயற்சியில் மல்லையா ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker