Latestஇந்தியா

‘வைரமுத்து பற்றி சுவிஸில் சுரேஷுக்கு தெரியும்! ஏனோ மறைக்கிறார்!’ – சின்மயி அதிரடி

சென்னை, அக்.12- சுவிட்சர்லாந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சுரேஷ் அவர்களுக்கு வைரமுத்துப் பற்றி பல விஷயங்கள் தெரியும். ஆனால் அவருக்கு அழுத்தம் கொடுக்கப் படுவதாக பாடகி சின்மயி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பிரபல பாடகியான சின்மயி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வைரமுத்து தன்னிடம் பாலியல் ரிதீயாக தவறாக நடந்து கொண்டதாக குறிப்பிட்டிருந்தார்.

இச்சம்பவம் கடந்த 2006 – 2006 ஆம் ஆண்டுகளில் நடந்தது என்று கூறியிருக்கிறார். இலங்கைத் தமிழர்களுக்காக வீழமாட்டோம் என்ற ஆல்பத்தில் தானும் மாணிக்க விநாயகமும் பாடியிருந்ததாகவும் இது தொடர்பான வெளியிட்டு விழா சுவிட்சர்லாந்தின் நடந்ததாகவும் சின்மயி இந்த விழாவில் தானும் கலந்து கொண்டு பாடியதாக கூறியுள்ளார்.

விழா முடிந்து எல்லோரும் புறப்பட்ட நிலையில், வைரமுத்து தன்னை ஹோட்டல் அறைக்கு அழைப்பதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் வந்து கூறியதாக சின்மயி கூறியுள்ளார். இதையடுத்து சின்மயின் டுவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து பலரின் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில் சுவிட்சர்லாந்து குறித்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த சுரேஷ் என்பவர் சின்மயிக்கு எதிராக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில் தவறான வார்த்தைகளைp பயன்படுத்துவதை சின்மயி நிறுத்திக் கொள்ளவேண்டும். ஒரு படைப்பாளி மீது குற்றச்சாட்டும் சின்மயி மீது, உலகத் தமிழர்கள் கோபத்தில் உள்ளனர். சின்மயியும் அவரது தாயார் என்னுடைய இல்லத்தில் தான் தங்கினார்கள் என அந்த வீடியோவால் கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்த சின்மயி சுரேஷ் வீட்டில் தான் தங்கினோம். பாடகர் மாணிக்க விநாயகமும் தங்கினார். ஆனால் நிகழ்ச்சி முடிந்தவுடன் அவரை அனுப்பி விட்டார்கள்.

ஆனால் எங்களுக்கு டிக்கெட் ‘புக்’ செய்யவில்லை. மேலும் சுரேஷ் எங்களை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை வேறு ஒருவரிடம் ஒப்படைத்து விட்டு சென்று விட்டார். அத்தம்பதிகளுக்கு சுத்தமாக ஆங்கிலம் தெரியாது. ஜெர்மன் தான் தெரியும். வைரமுத்து பற்றி பல விஷயங்கள் சுஷுக்கு தெரியும். ஆனால் அவருக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது என கூறியுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker