Latestஉலகம்

‘அமெரிக்காவை முறியடிப்போம் வாருங்கள்!’ -இந்தியாவுக்கு சீனா அழைப்பு

பெய்ஜிங், அக்.13- அமெரிக்காவின் வர்த்தகப் போரை முறியடிக்க இந்தியாவுடன் ஒருங்கிணைந்து செயல்பட விரும்புகிறோம் என்று சீனா தெரிவித்தது.

அமெரிக்கா – சீனா இடையேயான வர்த்தகப் போர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்டுள்ள பொருளாதார நடவடிக்கைகளால் சீனாவின் வர்த்தகம் பாதிக்கப்பட்டு வருகிறது

இந்நிலையில் அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிகளை ஒன்றிணைந்து எதிர்க் கொள்வோம் என இந்தியாவுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து சீன தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் ஜி ரோங் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:

தற்போது காணப்படும் வர்த்தக நெருக்கடிகளை எதிர்கொள்ள சீனாவும் இந்தியாவும் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம். இரு நாடுகளும் பெரும் பொருளாதாரச் சக்தியை கொண்டிருக்கின்றன.

அமெரிக்கா மேற்கொள்ளும் எந்தவொரு வர்த்தக நடவடிக்கையும் சீனாவை மட்டும் பாதிக்காது. இந்தியாவுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும் பொருளாதார சக்தி மிக்க நாடாக இந்தியா மாறுவதை அமெரிக்காவின் நடவடிக்கை தடுக்கும்.

சீனா மற்றும் இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பொருளாதார விஷயங்களில் அமெரிக்கா அதிகளவு தலையிடுகிறது. அனைத்துலக அளவில் பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் அப்போது தான் இருநாட்டு வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker