Latestமலேசியா

டோலை அகற்ற முடியாதா? கட்டணத்தையாவது குறைக்கவும்!- பொருளாதார வல்லுநர்

கோலாலம்பூர்,அக்.13- பக்காத்தான் ஹராப்பான் அரசு டோல் கட்டண வசூலை நீக்கும் தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அதற்கான சாத்தியம் இல்லை என்றால், டோல் கட்டணத்தையாவது பக்காத்தான் அரசு குறைக்க வேண்டும் என பொருளாதார வல்லுநர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.

சன்வே பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியரான டாக்டர் இயா கிம் லெங் அந்தப் பரிந்துரையை முன் வைத்துள்ளார். மக்களின் நிதிச் சுமையில் பங்குக்கெடுத்துக் கொள்வது அரசாங்கத்தின் கடமை என்றார் அவர்.

டோல் கட்டண வசூல் அரசாங்கம், மக்கள் இரு தரப்புக்குமே சுமையை ஏற்படுத்தாத வண்ணம் வசூலிக்கப்பட வேண்டும். அதற்கு, டோல் கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

டோல் இல்லாத நெடுஞ்சாலையை அமைப்பது சாத்தியம் இல்லையென நேற்று பிரதமர் துன் மகாதீர் வெளிப்படையாகக் கூறியிருந்தார்.

அதன் தொடர்பில், டாக்டர் இயா இந்தப் பரிந்துரையை முன்வைத்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker