Latestசினிமா

நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்! – இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர்

பாபநாசம் அக். 13 -நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என அவரது தந்தையும் இயக்குனருமான இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

பாபநாசம் வந்த இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர்.அங்கு நடைபெற்ற தாமிரபரணி புஷ்கர விழாவில் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் இதை அவரது தந்தையாக கூறவில்லை. பொதுமக்களில் ஒருவராக கூறுகிறேன். நான் பிறப்பால் கிறிஸ்துவனாக இருந்தாலும் இந்து தத்துவத்தை பின்பற்றுகிறேன். தற்போது ஆன்மீக பயணமாக நான் வந்துள்ளேன்.

25 ஆண்டுகளாக ஈஷா யோகா மையத்தில் சத்குருவின் சீடராக உள்ளேன். இதுவரை 69 படங்கள் இயக்கி உள்ளேன். மன மகிழ்ச்சிக்கு ஜாதி, மத வேறுபாடுன்றி ஆன்மீகத்தில் ஈடுபடவேண்டும். 100 முறை காசிக்கு சென்றுள்ளேன். கைலாச யாத்திரையும் மேற்கொண்டுள்ளேன்.

தினமும் காலையில் யோகா செய்து வருகிறேன். பாபாநாசம் மிக முக்கியமான தலம். பாவங்களை போக்கும் அற்புத தீர்த்த கட்டம் இங்குள்ளது.

144 ஆண்டுக்கு ஒரு முறை கொண்டாடக்கூடிய தாமிரபரணி புஷ்கர விழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி. நம் முன்னோர்கள் ஆன்மீகத்தை அறிவியலுடன் இணைத்தே வகுத்துள்ளனர். உலகில் எந்த மூலையில் இருப்பவர்களும் ஒரு முறையாவது பாபநாசம் வரவேண்டும். இவ்வாறுஅவர் குறிப்பிடார்.

நடிகர் விஜய் பற்றிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த இயக்குனர் எஸ்.ஏ. சந்திர சேகர், அவர் அரசியலுக்கு வரவேண்டும். இதை மக்களில் ஒருவனாக இருந்து கூறுகிறேன். ஒரு தந்தையின் கருத்தாகக் கொள்ள வேண்டாம் என்று அவர் சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker