Latestமலேசியா

போர்ட்டிக்சனில் வாக்குப் பதிவு சுறுசுறுப்பு! நண்பகல் வரை 34 விழுக்காடு!

போர்ட்டிக்சன், அக்.13- போர்ட்டிக்சன் இடைத்தேர்தல் வாக்களிப்பு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் கிட்டத்தட்ட ஐந்து நேரமே வாக்களிப்பு முடிவடைவதற்கு இருக்கும் நிலையில் நண்பகல் 12 மணிவரையில் 34 விழுக்காடு வரை மக்கள் வாக்களித்து உள்ளனர்.

காலையில் தொடங்கிய இந்த வாக்களிப்பில், காலை 11 மணி வரையில் 24 விழுக்காட்டினர் அதாவது 6,800 பேர் வாக்களித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நண்பகல் 12 வரையில் வாக்களிப்பை முடித்திருந்த வாக்களர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 23,228 என மதிப்பிடப்படுகிறது. இந்தத் தொகுதியில் மொத்தம் 68,317 வாக்காளர்கள் உள்ளனர்.

இதே மாதிரியிலான வாக்களிப்பு விதம் தொடருமேயானால் வாக்களிப்பு நேரம் முடியும் போது கிட்டத்தட்ட 68 முதல் 70 விழுக்காடு வரை கூட வாக்குப் பதிவு விகிதம் இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker