Latestமலேசியா

போர்ட்டிக்சன்: வென்றார் அன்வார்! 23,560 வாக்குகள் வித்தியாசம்!

போர்ட்டிக்சன் அக்.13- போர்ட்டிக்சன் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் கூடுதலான பெரும்பான்மையில்,  23, 560 வாக்குகள் வித்தியாசத்தில் பிகேஆர் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் வாகை சூடியுள்ளார்.

அதிகாரப்பூர்வ முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் அன்வார் 31,016 வாக்குகள் பெற்றூ வெற்றியை நிலைநாட்டியுள்ளார். வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி முதலே பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் முன்னணி வகித்தார்.

அவருக்கு அடுத்த நிலையில் பாஸ் கட்சி வேட்பாளர் முகம்மட் நஸ்ரின் 7,456 வாக்குகள் பெற்றுள்ளார். இங்கு கடந்த தேர்தலில் பாஸ் பெற்ற வாக்குகளை (6,594 வாக்குகள்) விட கூடுதலான வாக்குகளை இம்முறை பாஸ் கட்சி பெற்றுள்ளது.

சுயேட்சையாக போட்டியிட்ட நெகிரி செம்பிலான் மாநில முன்னாள் மந்திரி புசார் டான்ஶ்ரீ முகம்மட் இசா 4,230 வாக்குகள் பெற்று 3ஆவது இடத்தைப் பிடித்தார். மற்றொரு சுயேட்சையான முகமட் சைபுல் 82 வாக்குகளும் பெற்றார். இதர சுயேட்சை வேட்பாளர்களான ஸ்டீவ் சான், 337 வாக்குகளும் லாவ் செக் யான் 214 வாக்குகளும் மற்றும் கான் ஷி யென் 154 வாக்குகளும் பெற்றனர்.

இதனிடையே இந்தியர்கள் அதிகமாக வாழும் பகுதிகளான லாடாங் செங்காங், மற்றும் லாடாங் அதெர்டன் ஆகிய இரு பகுதிகளில் கணிசமான இந்திய வாக்காளர்கள் அன்வாருக்கே வாக்களித்து உள்ளனர் என்று வாக்கு எண்ணிக்கையின் போது தெரிய வந்துள்ளது.

இந்தத்தொகுதியில் மொத்தம் 75,700 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 45,462 பேர் இன்றைய இடைத்தேர்தலில் வாக்களித்துள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker